உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடங்கியது இண்டிகோ விமான சேவை: பயணிகள் பரிதவிப்பு

முடங்கியது இண்டிகோ விமான சேவை: பயணிகள் பரிதவிப்பு

புதுடில்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னையால், இண்டிகோ விமான சேவை முடங்கியது. டிக்கெட் முன்பதிவு மற்றும் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. இதனால், செக் இன் செய்வதில் கால தாமதம் ஆனதால், நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பரிதவிப்புக்குள்ளாகினர்.இது குறித்து விளக்கம் அளித்து உள்ள இண்டிகோ விமான நிறுவனம், '' இது தற்காலிகமாக ஏற்பட்ட பிரச்னை. இதனை விரைவில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழில்நுட்ப பிரச்னை காரணமாக செக் இன் செய்வதில் தாமதம் ஏற்படலாம். நீண்ட நேரம் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டியிருக்கும். பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்வதுடன், பயணம் இனிதாக இருக்க எங்களது குழுவினர் உதவி செய்வார்கள். பாதிப்பு சரி செய்யப்பட்டு, நிலைமையை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் என்ன மாதிரியான கோளாறு ஏற்பட்டு உள்ளது என்பதை இண்டிகோ நிறுவனம் விளக்கவில்லை.இண்டிகோ சேவை முடங்கியதால் பாதிக்கப்பட்டவர்கள், விமான நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசல் மற்றும் அங்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
அக் 05, 2024 19:42

தொழில்நுட்ப அளவில் அதிபதியான முட்டாள்களை பணியில் அமர்த்தியுள்ளதோ இண்டிகோ ?


அப்பாவி
அக் 05, 2024 19:29

சேவை லட்சணம் நம்ம MCA அமைச்சக செயல்பாடு மாதிரியே இருக்கு.


சமீபத்திய செய்தி