உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் இருந்து சீனாவுக்கு விமான சேவை: நவம்பர் 10ல் தொடங்குகிறது

டில்லியில் இருந்து சீனாவுக்கு விமான சேவை: நவம்பர் 10ல் தொடங்குகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை நவம்பர் 10ம் தேதி தொடங்கும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூனில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது. இதனால் விமான சேவையும் கைவிடப்பட்டது.கடந்த மாத துவக்கத்தில் சீனாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து அவர் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவையை மீண்டும் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தியா - சீனா இடையேயான உறவு புத்துயிர் பெற்றது.இந்நிலையில், மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26 ம் தேதி முதல் தினசரி விமான சேவை துவங்கும். இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் பயன்படுத்தப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது, இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நவம்பர் 10ம் தேதி முதல் டில்லியில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.இது குறித்து இண்டிகோவின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா கூறியதாவது: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கோல்கட்டாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவையுடன், கூடுதலாக, டில்லி மற்றும் குவாங்சு நகருக்கு இடையே தினசரி நேரடி விமானங்கள் இயக்கப்படும். இது இருநாடுகளுக்கு உறவை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையேயான விமான சேவை மீண்டும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும், என்றார்.

பயண நேரம்

டில்லி-குவாங்சு (6E 1701) டில்லியில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 4:50 மணிக்கு குவாங்சு நகரை சென்றடையும்.திரும்பும் பயணத்தில், 6E 1702 விமானம் குவாங்சு நகரில் இருந்து தினமும் அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு காலை 10:10 மணிக்கு டில்லியை வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வாய்மையே வெல்லும்
அக் 12, 2025 17:28

நான் இண்டிகோ வில் துபாய் வந்தேன். சுத்த தகரடப்பா சேவை.சாப்பிட ஒன்னும் கொடுக்கமாட்டார்கள் .. கெஞ்சி கேட்டால் ஒருபாட்டில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருக்கு .


ஜெய்ஹிந்த்புரம்
அக் 12, 2025 10:57

இதுக்காக அமெரிக்கா 15% புது வரி போடுமோ?


ngm
அக் 12, 2025 09:28

why indigo...why not other companies...indigo unfit for domestic travel. they don't know what is international airlines...for 6 hrs journey, they use the same town bus aircraft. no proper food served...no USB charger for mobiles...these are basic amenities


Ramesh Sargam
அக் 12, 2025 08:34

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை கேள்விப்பட்டால், இரண்டு நாடுகளுக்கும் மேலும் அதிக வரி விதிப்பார்.


முக்கிய வீடியோ