மேலும் செய்திகள்
மத்திய அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்
5 hour(s) ago | 20
புதுடில்லி: உள்நாட்டு விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டது.ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த நிறுவனத்தின் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதத்தை சந்தித்துள்ளன. தினமும் 2,200 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், 35 சதவீதம் மட்டுமே இன்று செயல்பாட்டில் இருந்தன. டில்லி, மும்பை, ஹைதராபாத், , பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.விமானிகளுக்கு என பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் காரணமாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: விமானிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தினால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்களை இயக்க, சில விமானிகளை இண்டிகோ நிறுவனம் அனுப்பி வைத்தாலும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. 35 சதவீதம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இயக்கப்படும் விமானங்களும் 7 - 8 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தொழில்நுட்பம், விமான நிலையங்களில் நெரிசல் மற்றும் இயக்குவதில் உள்ள பிரச்னை காரணமாக சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் தாமதமாகின. நிலைமை விரைவில் சீரடைய தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் செய்து வருகிறது. மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தேவைப்படும் பயணிகளுக்கு விமானக் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். ஏற்பட்ட இடையூறுகளுக்கு பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 20