உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாற்றம்! இந்திய - வங்கதேச எல்லையில் பதற்றம்

ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாற்றம்! இந்திய - வங்கதேச எல்லையில் பதற்றம்

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில், இந்தியா - வங்கதேசம் எல்லையில், ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தி சங்கேத குறியீடுகளுடன், பெங்காலி, உருது, அராபிக் மொழிகளில் தகவல்கள் பரிமாறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது, பயங்கரவாதிகளின் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rtyjm56m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வன்முறை

இதைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவற்றைத் தவிர, ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால், இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வங்கதேசத்தில் இருந்து பலர் நம் நாட்டுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர்; பயங்கரவாதிகளும் ஊடுருவி வருவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், 'ஹாம் ரேடியோ' எனப்படும் அமெச்சூர் ரேடியோ என்ற தொலை தொடர்பு வசதி பயன்படுத்துவோர், இந்தியா - வங்கதேசம் எல்லையில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், சந்தேகப்படும்படி சங்கேத குறியீடுகளுடன், பெங்காலி, உருது, அராபிக் மொழிகளில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை கண்டுபிடித்தனர். ஹாம் ரேடியோ என்பது ஒரு பொழுதுபோக்குடன் கூடிய தகவல் பரிமாற்ற முறை. வழக்கமான தொலைபேசி, மொபைல் போன் வசதி இல்லாத இடங்களில் ஹாம் ரேடியோ பயன்படுத்துவோர், ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்வர். இதை பயன்படுத்த லைசென்ஸ் பெற வேண்டும். பேரிடர் காலங்களில் இந்த வசதி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

சந்தேகம்

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஹாம் ரேடியோ பயன்படுத்துவோர், கடந்த டிசம்பரில் முதல் முறையாக இது போன்ற சந்தேகப்படும்படியான தகவல் பரிமாற்றம் செய்யப்படு வதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாசிர்ஹட், பான்கோன் உட்பட சில இடங்களில் இந்த ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாறப்பட்டது தெரிய வந்துள்ளது. ''வழக்கமாக, ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தும்போது, மற்றொருவர் இணைந்தால், தன்னை அறிமுகம் செய்ய வேண்டும். ''ஆனால், இந்த விவகாரத்தில் அவர்களை அறிமுகம் செய்யாமல், இணைப்பை துண்டித்து விட்டனர். இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என, மேற்கு வங்க ரேடியோ கிளப் செயலர் அம்பரிஷ் நாக் பிஸ்வாஸ் கூறினார்.இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M V Seetaraman
பிப் 10, 2025 13:53

வம்பு செய்தல் பாவம்


Barakat Ali
பிப் 10, 2025 10:22

தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதால் ஹாம் ரேடியோ இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.. அதே கண்ணோட்டத்துடன் தான் இப்பிரச்னையை நாம் அணுகவேண்டும் ....


GMM
பிப் 10, 2025 09:22

குடியுரிமை சட்டம் 1955 ன் படி, தற்போதைய சூழலுக்கு ஏற்ப திருத்தம் செய்து, பிறப்பின் /வங்கதேச இஸ்லாம் சாராத பிற மத மக்கள் அடிப்படையில் மத்திய அரசு மேற்கு வங்க மாநில மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை அடிப்படையில் வாக்குரிமை போன்ற சலுகைகள் வழங்க வேண்டும். பங்களாதேஷ் ஒரு கலவர பூமியாக மாறிவருகிறது. சீனா நோக்கி வங்க முஸ்லீம் செல்ல மாட்டார்கள். இந்திய அரசு உடன் குடியுரிமை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.


அன்பே சிவம்
பிப் 10, 2025 09:14

1). பங்களாதேஷ் தடம் புரண்டு பாகிஸ்தான் போன்று அழிவு பாதையில் பயணிக்க விரும்புகிறது. 2). பங்களாதேஷ் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதமக்கள் போன்றோர் கடந்த ஓரு வருடமாக எல்லா வித்தலும் நெருக்கடி நிலையில் உள்ளனர். 3). இதற்கு ஒரே தீர்வு பங்களாதேஷ் நாட்டின் உள்ளே ஒரு நாட்டினை உருவாக்கி இந்தியாவின் Control வைக்க வேண்டும். அதாவது பாலஸ்தீன் உள்ளே காசா இஸ்ரேல் control இருப்பது போல். 4). காலப்போக்கில் நடக்கும் விசயங்களை பொறுத்து மேற்கொண்டு முடிவுகள் எடுக்கலாம். 5). இதனால் பங்களாதேஷில் முஸ்லீம் மற்றும் மற்ற சிறுபான்மையினர் சுமூகமாக வாழ்வார்கள்.


Mohan
பிப் 10, 2025 09:11

இதெற்கெல்லாம் முக்கிய காரணம் நம் உளவுத்துறை தோல்வி, செயல்படாத உதவாக்கரை அமித் ஷாவின் இந்த உள்துறை தான் காரணம் ....டிரம்ப் வந்த மரு நாளே கள்ள குடியேறிகளை நாடு நடத்துகிறார்கள் ஆனா இவுங்க என்னடானா எதனை பேர்னு கணக்கு தெரியாதமா ..NIA தகவல் படி சுமார் 6 கோடி பங்களாதேஷ் , ரோஹிங்கிய காரர்களும் இருப்பாங்கன்னு சொல்ராங்க ... இவுனுகள எப்போ கண்டுபிடிச்சு, கைது பண்ணி திருப்பி அனுப்பி நடக்குமா ..அதுக்குள்ள நம்ம நாட்டை முஸ்லீம் நாடக்கிருவானுக ...அப்பறோம் ஷேக் ஹசினா மாதிரி நம்ம பெரிய ஆளுக எல்லாம் ப்லைட் ஏறி அவுங்கவுங்க தீவுல போயி தப்பிச்சுக்குவாங்க ... சாதாரண மக்களோட நிலைமை ...நினைக்கவே பயங்கரமா இருக்கு ...


கிஜன்
பிப் 10, 2025 06:56

நன்றாக கூர்ந்து கவனியுங்கள் .... சமஸ்கிருதமாக இருக்கப்போகிறது ....


அம்பி ஐயர்
பிப் 10, 2025 08:10

அடி...


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 10, 2025 08:22

எப்போலிருந்து சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தான்?


Mohan
பிப் 10, 2025 09:04

தமிழா கூட இருக்கலாம் இல்லியா .உன்னை போல தேச விரோதிகள் நம் மாநிலத்தில் அதிகம் உண்டு ..


Kasimani Baskaran
பிப் 10, 2025 06:42

ஒரு கோடி வங்கதேசத்தவர்களை உள்ளே விட்டு மம்தா லீலை செய்வது வரை விட்டு விட்டு குத்துதே குடையுதே என்றால் அதனால் வரும் பிரச்சினையை சமாளித்துத்தான் ஆகவேண்டும்.


சேகர்
பிப் 10, 2025 08:24

எல்லை பாதுகாப்பு மத்திய அரசின் கீழ் உள்ளது என்று தெரியாதா தம்பி


Dharmavaan
பிப் 10, 2025 08:46

மம்தா பேகம் கள்ளக்குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுத்தது தேச துரோகம் தண்டிக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை