வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மை நம் இளைஞர் பட்டாளம் இன்போசிஸ் போன்ற கம்பெனிs நம்பக்கூடாது அவர்கள் திறமை ஒன்றே நம்பிக்கை என்று உழைப்பை அதிகரிக்க வேண்டும் பயிற்சி முயற்சி தொடர்ச்சி வளர்ச்சி
70 மணி நேரம் உழைக்கலேன்னா கல்தா தான்.
புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியர்கள் 300 பேர், தகுதி காண் தேர்வில் வெற்றி பெறாத நிலையில், வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்போசிஸ். இந்த நிறுவனம், பணிக்கு தேர்வு செய்த ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இப்படி மைசூரு வளாகத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை திறன் பயிற்சி முடிவில், ஊழியர்கள், உரிய திறன்களை பெற்று விட்டார்களா என்று கண்டறியவு தேர்வு நடத்துகிறது.மூன்று முறை வாய்ப்பு அளித்தும் வெற்றி பெறாத ஊழியர்கள், 300 பேரை பணியில் இருந்து விடுவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தவர்கள்.இது பற்றி தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் சங்கம் (என்.ஐ.டி.இ.எஸ்.,) கூறுகையில், 'வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இது பற்றி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளது.
உண்மை நம் இளைஞர் பட்டாளம் இன்போசிஸ் போன்ற கம்பெனிs நம்பக்கூடாது அவர்கள் திறமை ஒன்றே நம்பிக்கை என்று உழைப்பை அதிகரிக்க வேண்டும் பயிற்சி முயற்சி தொடர்ச்சி வளர்ச்சி
70 மணி நேரம் உழைக்கலேன்னா கல்தா தான்.