உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி: சொல்கிறார் ராகுல்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் உள்ளது தெரியவந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.ஹரியானாவில் ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியானாவில் தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி பூரன்குமார் தனது சாதியின் காரணமாக அவமானத்தையும், ஒடுக்குமுறைகளையும் தாங்க வேண்டியிருக்கும் போது சாதாரண தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.ரேபரேலியில் வால்மிகி என்பவர் கொலை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அவமானம், இப்போது ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை. இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.பாஜ ஆர்எஸ்எஸ் சிந்தனை சமூகத்தில் விஷயத்தை பரப்பியுள்ளது.தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதிக்கான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.இந்த போராட்டம் பூரன்குமாருக்காக மட்டும் அல்ல. அரசியல் அமைப்பு, சமத்துவம் மற்றும் நீதிக்காக போராடும் ஒவ்வொரு இந்தியருக்கான போராட்டமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
அக் 10, 2025 09:22

பப்பு.... குறைக்கு பிறந்த குறை.... அதனால் குறை சொல்வதையே முழு நேர வேலையாக கொண்டு இருக்கிறார்.... 50 ஆண்டுகள் கான் கிராஸ் கட்சி இந்த நாட்டுக்கும்.... நாட்டு மக்களுக்கும் செய்த அநீதிகள் ஏராளம்.... மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த பின்பு உங்களது நிலைப்பாடு.... பிரிந்து சென்ற பாகிஸ்தான் என்ற மதவாத சக்திகளுக்கு ஆதராவாக இருந்தீர்கள் .... அதை விடுத்து நாட்டுக்கு உங்களால் எந்த நன்மையும் இல்லை..... இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது... பாகிஸ்தான் நாட்டுக்கு அப்போதைய மதிப்பில் 100 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் தானே கான் கிராஸ் கட்சி ஆட்கள்.


ராமகிருஷ்ணன்
அக் 10, 2025 06:45

தேடி தேடி புடிச்சு புதுசு புதுசா பி ஜே பி அரசின் மேல் குற்றம் சுமத்தி சாதனை செய்யும் ராகுலுக்கு இதற்கென நோபல் பரிசு தர சிபாரிசு செய்கிறேன்.


சின்னப்பா
அக் 10, 2025 04:45

இவர் குடும்பத்தில் யாருக்கும் பிரதமர் பதவி கிடைக்காததால், இவர் பிற்படுத்தப்பட்டதாக உணர்கிறார் போலும்!


Kasimani Baskaran
அக் 10, 2025 04:10

தமிழகத்தில் - கோவையில் கூட ஒரு அதிகாரி இது போல தற்கொலை செய்து கொண்டாரே... அப்போலோது இவர் எங்கு போயிருந்தார்?


Raj S
அக் 10, 2025 00:02

சாதியையும், மதத்தையும் மட்டும் வெச்சி அரசியல் செய்யறதுனால தான் உங்க கட்சி ஆட்சில இல்லாம பன்னிரண்டு வருஷமா இருக்கு... இப்பிடியே இருந்தா இன்னும் இருபத்து அஞ்சு வருஷம் ஆனாலும் உங்களுக்கு மக்கள் ஓட்டு போட போறது கிடையாது...


கல்யாணராமன்
அக் 09, 2025 22:30

ராகுல் ஒரு அரை கிராக்கு


A viswanathan
அக் 10, 2025 00:49

சூப்பர் அப்பு.சீத்தாரம் கேசரி காங்கிரஸ் தலைவராய் இருந்தபோது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூட பாராமல் இத்தாலிகரிக்கு அந்த பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரை நாற்காலியோட எடுத்து வந்து தெருவில் வீசியதை மக்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கீறீர்களா.நீலி கண்ணீர் வடிக்காதீர்கள்.காங்கிரஸ் ஆண்டபோது தாழ்த பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகள் எத்தனையோ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை