உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செபி தலைவரிடம் விசாரணை? பார்லி குழு திட்டம்!

செபி தலைவரிடம் விசாரணை? பார்லி குழு திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள செபி தலைவர் மாதவி புரி புச்-ற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.‛செபி' எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருப்பவர் மாதவி புரி புச். இவரும், கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், செபி தலைவராக இருந்து கொண்டு ஐ.சி.ஐ.சி.ஐ., தனியார் வங்கி நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ.17 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், மாதவி புரி புச் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.இந்நிலையில் மாதவிக்கு எதிரான புகாரை விசாரிக்க பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, அக்குழுவின் தலைவராக இருக்கும் கே.சி.வேணுகோபால், அவருக்கு சம்மன் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vasu
செப் 06, 2024 22:41

பப்பு மீது பல்வேறு பாஸ்போர்ட் உண்மை + போலி வைத்து இருக்கும் குற்றசாட்டுகள் பல்வேறு நாட்டில் உள்ளூர் குடி உரிமை பிரஜை என்று சொல்லி பல ஆயிரம் கோடி பணம் வெளிநாட்டு வங்கிகளில் பப்பு வைத்து இருக்கார். அமெரிக்கா , கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து , மெக்ஸிகோ UK என்று பல நாட்டிலும் , அந்த நட்டு பிரஜை பிரஜை என்று சொல்லி பப்பு அக்கௌன்ட் வைத்து இருக்கார் எல்லா நாட்டிலும் என்ன ID கொடுத்து இருக்கார் என்று விசாரிக்க வேண்டும் ஹிந்துக்களை தாக்கிய ஹிந்து கோவில்களை இடித்த பங்களாதேஷ் புரட்சிக்கி பப்பு தான் ஜார்ஜ் சோர்ஸ் மூலம் Funding செய்து இருக்கான் என்றும் ஒரு குற்றசாட்டு உள்ளது செபி தலைவர் மீது உள்ள குற்றசாட்டு + பப்பு மீது உள்ள குற்றச்சாட்டு இரண்டையுமே பிஜேபி மத்திய இந்திய அரசு சிபிஐ + NIA + எட் மூலம் விசாரிக்க வேண்டும்


தாமரை மலர்கிறது
செப் 06, 2024 20:11

செபி தலைவர் சிறந்த தேசப்பற்றாளர். அவர் மீது தேவை இல்லாத விசாரணையை கொண்டு வந்து, இந்திய ஸ்டாக் மார்க்கெட்டின் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்தி, பொருளாதாரத்தை சீர்குலைக்க திட்டம் போட்டுள்ளனர்.


நசி
செப் 06, 2024 20:02

பார்லி குழு என்று காங்கிரஸ் ஆடடம் ஆடுகிறதே..மாதாபி புட்ச் கல்வியால் அறிவால் நாட்டுக்கு சேவை செய்கிறார். ஆனால் திருமதி சோனியா ப்ரியங்கா ராகுல் அ ராசா சபரீசன் மீது பயங்கர ஊழல் குற்றங்கள் உளளதே அதை ஏன்விசாரிக்ககூடாது ...பாஜக நீதி துறை கீழ் அடிமையாக கிடப்பதால் நாட்டில் குழப்பம் விளைகிறது ..பரம் பொருள்தான் இந்த நாட்டை கேவலமான காங்கிரஸ் இருந்து காக்க வேண்டும்


Corporate Goons
செப் 06, 2024 19:55

மோடி ஆட்சியில் கார்போரேட்டுகளுக்கு எதிரான விசாரணை என்பது கண் துடைப்பு நாடகம். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் கும்பல் .


Rangarajan Cv
செப் 06, 2024 17:04

To satisfy the ego of some politicians this will be done. When nothing achieved each will throw mud on each other. Professional will run away to work in this environment. If no wrongdoing, govt should defend the professionals and not their Kursi.


Akash
செப் 06, 2024 19:07

Why would you assume there is no wrong doing? Hindenberg are not fools


Velan Iyengaar
செப் 06, 2024 16:30

இது இன்னொரு பிரிஜ்பூஷண் .....வேறு விதமான வகையில் .... 100% உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் பெரும் சுமையாக மாறும்


rsudarsan lic
செப் 06, 2024 16:59

Dont you realise ygat all those gehind her appointment are also guilty, which is unlikely? India is not that cheap to be commented from US and Australia


sundarsvpr
செப் 06, 2024 16:28

இது தேவையற்ற விசாரம். ஆயிரக்கணக்கான குழுக்கள் அமைத்து எந்த உறுப்பிடியான நல்லவைகள் கிடைக்கப்பெறவில்லை. மக்கள் பணம் வீண் .காலவிரயம். பல அரசியல் தலைவர்களை கண்டுள்ளோம். அடல் விஹாரி வாஜ்பாய் எல். கே அட்வானி மது தாண்டவதே ஓமாந்தூரார் குமாரசாமி ராஜா போன்ற நேர்மையானவர்களை காண்பது அரிது ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை