உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பீடை ரத்து செய்வதற்கான அவகாசத்தை அதிகரிக்க அறிவுறுத்தல் அவகாச காலத்தை ஓராண்டாக உயர்த்த அறிவுறுத்தல்

காப்பீடை ரத்து செய்வதற்கான அவகாசத்தை அதிகரிக்க அறிவுறுத்தல் அவகாச காலத்தை ஓராண்டாக உயர்த்த அறிவுறுத்தல்

புதுடில்லி:தனியார் காப்பீடு நிறுவனங்கள், 'பிரீ லுக் பீரியட்' எனப்படும், அவகாச காலத்தை, தற்போதுள்ள ஒரு மாதத்தில் இருந்து, ஓர் ஆண்டாக நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதிய காப்பீடு பாலிசிதாரர்கள், பாலிசியை வாங்கிய பின், அதன் தகவல்களை சரிபார்க்கவும்; அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அவர்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லாத பட்சத்தில், காப்பீடை ரத்து செய்து கொள்ள ஏதுவாகவும் அவகாச காலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அவகாச காலத்துக்குள்ளாக காப்பீடை ரத்து செய்யும்பட்சத்தில், எந்த பிடித்தமும் இன்றி முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும். இதனிடையே, இந்த காலத்தை ஓர் ஆண்டாக அதிகரிக்க தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மத்திய நிதி துறை செயலர் நாகராஜூ தெரிவித்துள்ளார். காப்பீடை திரும்பப் பெறும் வசதியை, பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி., ஏற்கனவே அறிமுகம் செய்தது. அதேபோல, தனியார் காப்பீடு நிறுவனங்களும் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை