உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் காங்., மனு

தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் காங்., மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.தலைமைத் தேர்தல் கமிஷனின் பரிந்துரையின்படி, பொது மக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் 1961 ன் விதி 93 ல் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இது தொடர்பான அறிக்கை கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன், தேர்தல் நடத்தை விதி 93(2)(ஏ) பிரிவின் படி, தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும். புதிய திருத்தத்தின்படி சில ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும் என மாற்றப்பட்டு உள்ளது.திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. இதனால், புதிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபத்திய தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் கமிஷன் , அவசர கதியில் தன்னிச்சையாக யாருடன் ஆலோசிக்காமல் முக்கியமான சட்டதிருத்தத்தைமேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.தேர்தல் நடத்தையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. இதனை சுப்ரீம் கோர்ட் மீட்டெடுக்க உதவும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
டிச 24, 2024 17:55

வேலையில்லாத ..... பூனையை பிடிச்சி ...... நீதி மன்றஙகளின் நேரத்தை வீணடிக்கும் பெரிய கட்சிகளுக்கு தூண்டுபவர்களுக்கும் மிக திக அதிக தண்டம் விதிக்க வேண்டும்


nagendhiran
டிச 24, 2024 17:45

சரி உங்களுக்குதான் வாக்கு எந்திரம் மேலேயே நம்பிக்கை இல்லையே அப்புறம் என்ன .......ஶ பழைய நடைமுறையே போதும்னு கூவுறானுங்க?


GMM
டிச 24, 2024 17:20

ஆய்வுக்கு உட்படுத்தி தான் மின்னணு எந்திரம் தேர்தலில் பயன்படுத்த படுகிறது . இதனை மீண்டும் பொது வெளியில் மக்கள் ஆய்வு என்று குழப்பி, காங்கிரஸ் கலவரத்தில் கொண்டுவிடும். ? தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் ஒரு அரசியல் சாசன அமைப்பு என்று கருதாமல், அரசியலுக்குள் இழுக்கிறது . ஒரு அரசியல் சாசனம் அமைப்பை உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் விசாரிக்க, மனு ஏற்க முடியாது. வாக்கு முறை ரகசியமானது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நீதிபதிகள் அனைவரும் வாக்காளர்தான் .


சம்பா
டிச 24, 2024 16:48

உதவாது (மன்றம் )


Sundar R
டிச 24, 2024 16:40

Election Commission is keeping its house clean by doing a lot of improvements for the benefit of all our citizens. Whats wrong?


Kasimani Baskaran
டிச 24, 2024 16:05

தேர்தலை பார்த்தல் பயம், இவிஎம் பார்த்தல் பயம், பாஜகவை பார்த்தல் பயம்... மொத்தத்தில் காங்கிரஸ் பீதியில் இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை