உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.40 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்திய பெண்கள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி, கோழிக்கோடு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 34 கிலோ உயர் ரக கஞ்சா, சாக்லேட்டுகளில் கலந்த 15 கிலோ மெத்தம்பெட்டமைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.40 கோடி என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக, திருச்சூரைச் சேர்ந்த சிமி, 39, சென்னையைச் சேர்ந்த ராபியாட், 40, மற்றும் கோவையை சேர்ந்த கவிதா, 40, ஆகிய பெண்கள் 3 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். தாய்லாந்தில் இருந்து ஏர் ஏசியாவின் ஏகே-33 விமானத்தில் கஞ்சா கடத்தி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் யாருக்காக போதைப் பொருட்களை கடத்தி வந்தனர். இவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V Venkatachalam
மே 15, 2025 14:36

கேரளாவாக போனதால் எங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாமல் போய்விட்டது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.பெண்கள் பாதுகாப்பு தமிழகத்தின் பாதுகாப்பு.


venugopal s
மே 15, 2025 07:01

கோழிக்கோடு விமான நிலையமும் அதானி வசம் போய் விட்டதா?


c.mohanraj raj
மே 15, 2025 01:11

உச்சநீதிமன்றம் உடனே ஜாமீன் கொடுப்பார்


சிட்டுக்குருவி
மே 14, 2025 21:48

சிங்கப்பூர் ,இந்தோனேஷியா நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனை உள்ளது .சமீபகாலத்தில் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது .போதை பொருள்தான் பயங்கரவாதத்திற்கு ஆதாரமாக உள்ளது . இனியும் இந்தியா இதில் மெத்தனமாக இருக்க கூடாது .இதனுடைய தீவிரதத்தை உணர்ந்து உடனடியாக தூக்கு தண்டனையை கொண்டுவரவேண்டும் . வேண்டுமென்றால் ஒரு அளவுகோல் நிர்ணயிக்கலாம் .உபயோகிப்பவர்களுக்கு ஒருவிதமான தண்டனையும்,விற்பனைசெய்வோருக்கும், கடத்தல் செய்வோருக்கும் கண்டிப்பாக தூக்கு தண்டனையும் அவசியம். நாட்டையும், நாட்டுமக்களையும் நாசம் செய்வோருக்கெல்லாம் பரிதாபம் காட்டக்கூடாது .


ராமகிருஷ்ணன்
மே 14, 2025 20:51

திமுகவினரின் அயலக அணியின் கிளை கேரளாவில் தொடங்கி விட்டார்களா. இந்தியா முழுவதும் வியாபாரம் அமோகமாய் நடக்கிறது. கட்சிக்கு வருமானம் தானே முக்கியம்


Ramesh Sargam
மே 14, 2025 19:58

போதைப்பொருள் கடத்துபவர்களுக்கும் ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்.


Raghavan
மே 14, 2025 20:50

ஆயுள் தண்டனையெல்லாம் வேஸ்ட். ஏதேனும் ஒரு சமயத்தில் விடுதலை ஆனாலும் ஆகலாம். சுட்டுக்கொல்லுவது தான் சரியான தண்டனை. அப்போது தான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.


V Venkatachalam
மே 15, 2025 14:31

ரமேஷ் நீங்க ரொம்பவே தடவிக் கொடுக்கிறீங்க. இந்த புல்லுருவிகளை அப்பவே தீர்த்து கட்டிடணும்.


Kasimani Baskaran
மே 14, 2025 19:04

எங்கெல்லாம் போதைப்பொருள் கடத்தல் பெரிய அளவில் நடக்கிறது அங்கு தீவிரவாதத்துக்கு நிதி திரட்டப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் விற்பனை நடந்ததைப்பற்றிய தகவல் தெரிந்தால் முடிந்தவரை என் ஐ ஏ வை தொடர்பு கொண்டு தகவல் கொடுப்பது நல்லது.


m.arunachalam
மே 14, 2025 18:22

இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதமாக கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை