உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோலார் மின் உற்பத்தி துறையில் முதலீடு ரூ.42 லட்சம் கோடியை எட்டும்!

சோலார் மின் உற்பத்தி துறையில் முதலீடு ரூ.42 லட்சம் கோடியை எட்டும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகளவிலான சோலார் மின் உற்பத்தி துறையில், முதலீடானது ரூ.42 லட்சம் கோடியை இந்தாண்டு முடிவுக்குள் தொட்டுவிடும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கணித்துள்ளார்.டில்லியில், இன்று சர்வதேச சோலார் கூட்டமைப்பின் 7 வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும் அந்த அமைப்பின் தலைவருமான பிரகலாத் ஜோஷி பேசியதாவது:கடந்த 2023ம் ஆண்டில் உலகளாவிய சோலார் மின் உற்பத்தி துறை முதலீடு ரூ.33 லட்சம் கோடியாக இருந்தது. அது, 2024ம் ஆண்டு இறுதியில்ரூ. 42 லட்சம் கோடியாக அதிகரித்துவிடும்.சூரிய மின்சக்தியானது, நிலக்கரி மற்றும் எரிவாயு சக்தியை காட்டிலும் செலவு குறைந்த சக்தியாகும். மேலும் இந்த முதலீடுகள் புதிய திறனைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சூரிய சக்தியின் செலவைக் குறைக்கின்றன. 2030ம் ஆண்டிற்குள் சூரிய சக்தி துறையில் ரூ.84 லட்சம் கோடி முதலீடுகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.100 கோடி பேருக்கு சோலார் மின் உற்பத்தி செய்வதே எங்களின் உத்தி. ஒவ்வொரு ஆண்டும் 1,000 மில்லியன் டன் கரியமில வாயு வெளியேறுகிறது. அவற்றை குறைக்க வேண்டும்.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா லட்சியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நிர்ணயித்ததோடு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம்.கடந்த மாதம், 90 ஜிகாவாட் சூரிய சக்தியை எட்டினோம். 2030 க்குள் புதுப்பிக்கத்தக்க சூரியசக்தி திறன் 500 ஜிகாவாட் என்ற பரந்த இலக்கை நோக்கி சீராக முன்னேறி வருகிறோம்.2030ம் ஆண்டுக்குள் 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, 125 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை பெற முயற்சித்து வருகிறோம். 37.5 ஜிகாவாட் மொத்த திறன் கொண்ட 50 சோலார் பூங்காக்களை அங்கீகரித்துள்ளோம்.மேலும் 2030ம் ஆண்டிற்குள் எங்களின் 30 ஜிகாவாட் இலக்கை அடையக்கூடிய கடலோர காற்றாலை மின்சக்தி தளங்களை அடையாளம் கண்டுள்ளோம்.உலக அளவில், இந்தியாவின் சிறந்த திட்டங்களில் சோலார் கூரை மின் தகடுகள் நிறுவுதலும் ஒன்றாகும்.2024ம் ஆண்டில், சோலார் டேட்டா போர்ட்டல் தொடங்கப்பட்டது, இது நாடு முழுவதும் சூரிய வளங்கள், திட்ட செயல்திறன் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய நிகழ்நேர தரவை வழங்குகிறது.இந்தியா சோலார் ஹப் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அதில் உலகளாவிய பங்கேற்பை ஊக்குவிக்க பல உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு ஜோஷி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 04, 2024 17:26

மின் துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோலார் மின் உற்பத்தி மத்திய அரசால் செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறை இல்லையெனில் இதன் சாதனை எந்த அரசை சார்ந்தது. மாநில அரசுகள் நினைத்தபோது மின்கட்டணத்தை உயர்த்துகிறது. அப்படியென்றால் மத்திய அரசு அனுமதியின்றி மாநில அரசு உயர்த்தமுடியுமா? உணவு பங்கீட்டு துறை மூலம்வழங்கும் பொருள்கள் மத்திய அரசு இலவசமாய் வழங்குகின்றது. ஆனால் மக்கள் மனதில் மாநில அரசு வழங்குவதாக நினைப்பு. இது தான் அரசியல்தனம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை