உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்தது உண்மை: உறுதி செய்தது ஈரான்

அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்தது உண்மை: உறுதி செய்தது ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: அமெரிக்காவின் தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.ஈரான் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால், இரண்டு நாடுகளுக்கு இடையே 13 நாட்களுக்கு மேல் போர் நடந்து வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q5dosv35&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்தது எனவும், அந்நாட்டால் பல ஆண்டுகளுக்கு அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என டிரம்ப் கூறினார். இதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையும் அறிவித்தார்.இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்க உளவுத்துறையினர் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப் அது போலி செய்தி என்றார். மேலும், அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்து இருந்தார்.இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளது உண்மை தான் என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஜூன் 26, 2025 04:06

தீவிரவாத நடவடிக்கை மூலம் ஈரான் கேவலப்பட்டுப்போனது என்பதை புரிந்து கொண்டு இனியாவது அடிப்படை வாதத்தை விட்டு வெளியே வந்தால் நல்லது.


Jagan (Proud Sangi )
ஜூன் 26, 2025 00:24

இன்னும் அடி விழும்ன்னு பயந்து கால்ல விழுந்துட்டான் ஹா ஹா ஹா


JAINUTHEEN M.
ஜூன் 26, 2025 00:16

ஒரு சுயராஜ்ஜியமான நாடு அனு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்று சொல்ல இவர்கள் யார்.? அமெரிக்கா ஈரானுக்கு புத்தி சொல்வதற்கு முன் தன்னிடமுள்ள 5000 அனு ஆயுதங்களை அழித்துவிட்டு பிறகு புத்தி சொல்லட்டும். அனு ஆயுதம் வைக்க ஈரானுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அவர்கள் ஆக்கப்பூர்வமான வேறு பணிகளுக்காகவே அனு ஆய்வு செய்கிறார்கள். நீங்களே வைக்கச்சொன்னாலும் அவர்கள் அனு ஆயுதம் வைக்க மாட்டார்கள். ஏனெனில், பேரழிவு ஆயுதம் வைத்திருப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்பதை நம்புபவர்கள் அவர்கள். எனவே, ஈராக்கில் இதே பொய்யைச்சொல்லி அவரைக் கொன்றவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்ட இயலவில்லை. அதே பார்முலாவை பயன்படுத்தி ஈரானை அழிக்க நினைத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது மூக்குடைந்து நிற்கிறார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2025 15:46

ஈரானை எதிர்க்கும் சன்னி முஸ்லிம் நாடுகளுக்கும் ஈரானின் அணுகுண்டால் ஆபத்து என்பதால்தான் அவர்கள் அனைவரும் அமெரிக்காவுடன் சுமுகமாக இருக்கின்றார்கள். சர்வாதிகார ஆட்சியின் கையிலுள்ள அணு ஆயுதம் குரங்கு கையிலுள்ள பூமாலை.


Jagan (Proud Sangi )
ஜூன் 27, 2025 18:41

போலீஸ் காரன் கையில் துப்பாக்கி இருப்பதற்கும், தீவிரவாதி கையில் துப்பாக்கி இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு


A1Suresh
ஜூன் 25, 2025 20:32

ஆபரேஷன் சிந்தூரில் கிரானா குன்றுகளின் மீது மோடிஜி குண்டுவீசி தாக்கினார். அதையே சாக்காக வைத்து டொனால்டு டிரம்ப் செய்தார். பேரிழப்பினை ஈரான் ஒப்புக்கொண்டது. பாகிஸ்தான் இன்னமும் தனது பேரிழப்பினை மறைக்கிறது.


Palanisamy Sekar
ஜூன் 25, 2025 20:05

வனக்குரங்கு கையில் தீப்பந்தம் கிடைத்தால் அது காடு முழுவதும் எரிவதற்கோர் சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி ஈரான் கையில் அணுஆயுதம் கிடைத்தால் அப்படித்தான் குரங்கின் நிலைதான் ஏற்பட்டிருக்கும். அதனை தடுத்த மொஸாட் உளவுத்துறையின் செயல்பாட்டிற்கும் அதனை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்த நிலையில், முழுவதுமாக முற்றாக அழிக்க அமெரிக்காவின் நடவடிக்கையை நிச்சயம் பாராட்டலாம். ஈரான் இனியாவது அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணத்தை விட்டொழித்து உலகத்தில் அமைதியை காக்க முன்வரவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை