உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொறுப்பற்ற நடத்தை: கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கினார் லாலு

பொறுப்பற்ற நடத்தை: கட்சியிலிருந்து மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கினார் லாலு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகனான தேஜ் பிரதாபை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு அறிவித்துள்ளார்.லாலுவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், நேற்று வெளியிட்ட சமூகவலைதள பதிவில், தனது தோழி அனுஷ்கா யாதவுடனான தனது நீண்டகால உறவை அறிவித்து, அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், உறவில் இருப்பதாகவும் சமூகவலைதள பதிவில் பகிர்ந்து குறிப்பிட்டு இருந்தார். தேஜ் பிரதாப் அறிவித்த மறுநாள் இன்று அவரது தந்தையான லாலு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xbujacaz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லாலு வெளியிட்டுள்ள அறிக்கை:தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக மதிப்புகளைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான கட்சியின் கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. தேஜ் பிரதாப்பின் நடத்தை குடும்ப மதிப்புகள் அல்லது மரபுகளுக்கு ஏற்ப இல்லை.அவரது பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மதிப்பு மற்றும் பொது ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால், கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து நீக்குகிறேன். கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். இனிமேல், அவருக்கு கட்சியிலும், குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது.அவர் நல்லது கெட்டது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நன்மை தீமைகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறன் வேண்டும். நான் எப்போதும் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பவன். கீழ்ப்படிதலுள்ள குடும்ப உறுப்பினர்கள் பொது வாழ்க்கையில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றி வருகின்றனர்.இவ்வாறு லாலு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
மே 25, 2025 21:58

என்ன இது கூத்தாக இருக்கிறதே இங்கே ராமதாசு அன்புமணியை கட்சியைவிட்டு விலக்கினார் அங்கே லாலு தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து விலக்கியுள்ளார் அடுத்தது திராவிட மாடல் அரசில் தகப்பன் தனயனை கட்சியைவிட்டு விலக்கும் காலம் நேரம் வெகு விரைவில் நடக்கப்போகுதாமே


Ramesh Sargam
மே 25, 2025 21:25

லாலு போல, தமிழக முதல்வரும் பொறுப்பற்ற உதயநிதியை கட்சியிலிருந்து நீக்குவாரா?


M S RAGHUNATHAN
மே 25, 2025 19:12

லாலு கருணாநிதி மாதிரி. அந்த கட்சி இவரது குடும்ப கட்சி. அடுத்த அழகிரி/ ஸ்டாலின் புராணம் நடைபெற வாய்ப்பு ?


Kulandai kannan
மே 25, 2025 19:07

குடும்ப கட்சி என்றாலே குழப்பம்தான்.வேரோடு பிடுங்கப்பட வேண்டிய களைகள்.


Raghavan
மே 25, 2025 18:47

இவரே ஒரு fraud இவருக்கு பிறந்தது எப்படி இருக்கும். பூனைக்கு பிறந்தது புலி ஆகமுடியுமா? இவரை எல்லாம் வெளியில் விட்டதே பெரிய தவறு. ரௌடிகளுக்கு போடும் மாவு கட்டு இவர்களுக்கெல்லாம் கிடையாதா? யார் அடிக்கிறார்கள் என்று தெரியாமல் முகத்தை மூடிக்கொண்டு பின்னி எடுக்க வேண்டும் மாட்டுக்கு வைத்த தீவனத்தையே சாப்பிட்டவர் இவர் மனிதர்களுக்கு கிடைக்கவேண்டியதை கொடுப்பாரா?.


Kasimani Baskaran
மே 25, 2025 18:39

ஒருவேளை நேர்மையாக நடந்திருப்பார்...


சங்கி
மே 25, 2025 18:17

மாட்டுக்கு வச்ச தீவனத்தை தின்ன இவரெல்லாம் உபதேசம் பண்ண கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 25, 2025 18:13

லாலு வெளியில் இருப்பதே நாட்டின் சட்டம் தலை குனியவேண்டிய விஷயம் .....


ஆரூர் ரங்
மே 25, 2025 17:58

இதெல்லாம் சகஜமப்பா. லாலு அமைச்சரவையிலேயே இரண்டுக்கும் மேல் வைத்திருந்தவர்கள் இருந்தனரே.


Iyer
மே 25, 2025 17:30

இவரது மகன் தேஜஸ்வி - 2 பத்திரிகையாளர்களை ACID ல் முழுக்கி கொன்றாரே - அது பொறுப்புள்ள நடத்தையா ? ராபரி தேவி தனது மருமகளை முடியைப் பிடித்து இழுத்து அடித்து வீட்டை விட்டு வெளியே தூக்கி எறிந்தாரே - அது பொறுப்புள்ள நடத்தையா?


சமீபத்திய செய்தி