உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதல் கசந்ததால் பலாத்கார வழக்கா? ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவு!

காதல் கசந்ததால் பலாத்கார வழக்கா? ஏற்க முடியாது என கோர்ட் உத்தரவு!

புதுடில்லி : திருமணம் செய்வதாக ஆசைகாட்டி பாலியல் உறவு கொண்டதாக, ஆணின் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, உத்தரவில் கூறியுள்ளதாவது:இந்த குறிப்பிட்ட வழக்கில், கணவனை விவாகரத்து செய்யாத நிலையிலும், இந்த இளைஞருடன் இந்த பெண் உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், முஸ்லிம் சட்டத்தின்படி, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இந்த இளைஞருடன் அந்தப் பெண் சேர்ந்து வாழ்ந்துள்ளார். அதுவும், நான்கு வயது குழந்தை உள்ள நிலையில்.இவ்வாறு, 2022 ஜூன் முதல் 2-023 ஜூலை வரை இருவரும் காதலித்ததுடன், சேர்ந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், 2023 ஜூலையில், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக, அந்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளார்.இவ்வாறு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பலாத்கார வழக்கு தொடர்வது என்பது, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகும். இவ்வாறு நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் பதிவாகின்றன. மேலும், தனிநபரின் கண்ணியத்தை சீர்குலைப்பதாகும்.சேர்ந்து வாழும்போது அல்லது காதலிக்கும்போது, நன்கு தெரிந்துதான், பரஸ்பரம் உடலுறவு கொள்கின்றனர். ஆனால், காதல் கசந்தபின் அல்லது பிரிந்து சென்றதும், பலாத்கார வழக்கு தொடர்கிறார்கள். இதை ஏற்க முடியாது. அதனால், அந்த இளைஞரை, வழக்கில் இருந்து விடுவிக்கிறோம். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
மே 27, 2025 16:31

திருமணம் ஒரு சடங்கு போல செய்கின்றனர் சனாதன தர்மத்தில், ஆனால் இப்போது இருக்கும் இளைய சமுதாயம் ஏதோ தாங்கள் மிக மிக முன்னேற்றம் அடைந்தவர்களாக எண்ணிக்கொண்டு நாறிப்போய் ஒரு ஆண் ஒரு பெண் சேர்ந்து வாழ்தல் பிடித்தல் இருக்கும் நாள் வரை பிறகு பிடிக்கவில்லையா பிரிந்து போதல் சாதாரணமாகி விட்டது.


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2025 14:47

சின்னப்பய பாயம்மா கேட்ட பணத்தை கொடுத்திருக்க மாட்டான் ....


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2025 14:45

She had been previously married, had obtained khulanama from her ex-husband and had been residing with her four-year-old son at her parental home. On the other hand, the man, a 25-year-old college student, was residing as a tenant next door.


Barakat Ali
மே 27, 2025 14:25

ஈரவெங்காயத்தின் தத்துவம் சுப்ரீம் கோர்ட்டு ஏறி இறங்குது ...... திராவிட மாடல் பெருமைப்படலாம் ....


Padmasridharan
மே 27, 2025 13:43

காதல் செய்யும்போது உடலறுவு கொள்வது இருவரின் சம்மதத்துடன்தான். . அப்படி இருக்கையில் கடற்கரை போன்ற பொது இடங்களில் ஏன் காவலர்கள் இவர்களை பயமுறுத்தி பணம் புடுங்குகின்றனர்.


lana
மே 27, 2025 11:55

கள்ள உறவு ன்னு சொல்ல்லாதீர்கள். திருமணம் கடந்த உறவுகள் அப்படி ன்னு சொல்லுங்கள்


Bahurudeen Ali Ahamed
மே 27, 2025 11:52

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதே கசந்துபோனால் எளிதாக கழட்டிவிடத்தானே அப்புறம் என்ன நீலிக்கண்ணீர், இதே நீ ஹிந்து அல்லது இஸ்லாமிய அல்லது முறைப்படியோ திருமணம் செய்திருந்தால் நீதிமன்றம் உன் பின்னால் நின்றிருக்கும், முறைப்படி விவாகரத்து செய்த நீ முறைப்படி திருமணமும் செய்திருக்க வேண்டும்


Ramesh Sargam
மே 27, 2025 11:27

அப்பா ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி. ஆம், நமது நீதிமன்றங்களில் ஒன்று ஒரு அருமையான தீர்ப்பு ஒன்று வழங்கி இருக்கிறது. அது என்ன தீர்ப்பு? - சேர்ந்து வாழும்போது அல்லது காதலிக்கும்போது, நன்கு தெரிந்துதான், பரஸ்பரம் உடலுறவு கொள்கின்றனர். ஆனால், காதல் கசந்தபின் அல்லது பிரிந்து சென்றதும், பலாத்கார வழக்கு தொடர்கிறார்கள். இதை ஏற்க முடியாது. இந்த நீதியை வழங்கிய நீதிமான்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். வாழ்த்துக்கள்.


sridhar
மே 27, 2025 11:14

பெண்களுக்கு சில விஷயங்களில் கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்களுக்கு எதிராக இருக்கிறது.


Ramalingam Shanmugam
மே 27, 2025 11:13

கொழுப்பெடுத்து படுத்து அவன் தலையில் மிளகாய் அரைத்து அதுவும் பத்தவில்லை என்று பகல் கொள்ளை வேறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை