உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!

சமூகத்தில் நிலவும் வன்முறைக்கு சினிமா காரணமா: சுரேஷ் கோபி சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'சமூகத்தில் நிகழும் வன்முறையில் சினிமாவுக்கும் பங்கு இருக்கலாம், ஆனால் அதுவே அதற்கு மூல காரணம் என கூற முடியாது'என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறினார்.திருவனந்தபுரத்தில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி கூறியதாவது:ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் மக்கள் அதைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.திரைப்படங்களில் வன்முறையைக் காட்டக்கூடாது அல்லது அதைக் குறைக்க வேண்டும் என்று கூறுவதை விட, அதில் காட்டப்படுவது எதுவும் சமூகத்துக்கு நல்லதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வன்முறையை சமாளிக்க பல்துறை அணுகுமுறை தேவை. சினிமாவை குற்றம் சாட்டுவதை விட சமூக, பொருளாதார மற்றும் உளவியல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vijai hindu
மார் 02, 2025 08:43

தமிழ்நாட்டை குட்டி சுவர் ஆக்கினது சினிமாதான்


naranam
மார் 02, 2025 00:53

அதிலென்ன சந்தேகம்? சமூகத்தை சீரழிப்பதில் இன்றைய சினிமாவின் பங்கு மிக மிக அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால் சமுதாயத்தில் நடப்பதைத் தான் காட்டுவதாக சப்பை கட்டு வேறு..


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 01, 2025 21:36

தமிழகம் சீரழிந்ததற்கு காரணமே சினிமா சினிமா கலைக் கூத்தாடிகள் தான். உளவியல் காரணம் கண்டுபிடிக்க வேண்டுமாம். அந்த உளவியல் மன நிலையை கெடுத்ததே உங்கள் சினிமா தான்.


வாசுபணிக்கர்
மார் 01, 2025 19:19

சினிமா இல்லாம நீயெல்லாம் தேர்தலில் ஜெயித்து மந்திரியா வந்திருக்க முடியுமா? கருத்து சொல்றீரு.


மால
மார் 01, 2025 17:22

M.G.R படங்கள் பாரு ஒரு பாடம் இருக்கும்


vijai hindu
மார் 02, 2025 09:10

பாடல் எல்லாம் கண்ணதாசன் எழுதியது


சமீபத்திய செய்தி