உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி

அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி

கோழிக்கோடு : சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் கேரள அரசு நடிப்பதாக கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபகாலமாக இங்கு பாரத மாதா தொடர்பாக கவர்னருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. இந்நிலையில், கோழிக்கோடில் நேற்று நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்ற கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பேசியதாவது: ஆசிரியர்கள் பாதங்களை மாணவர்கள் கழுவி பூஜை செய்யும் குரு பூஜைக்கு பள்ளிகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை சந்தித்து பேசினர். கலாசாரம் உச்சத்தில் உள்ள ஒரு மாநிலத்தில், இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன் என யோசித்தேன். எல்லாம் அரசியலுக்காக தான். பாரத மாதாவையும், குரு பாத பூஜையையும் விமர்சிப்பவர்கள் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் நடிக்கின்றனர். இவர்களுக்கு உண்மையில் மனதளவில் துாய்மையும், கொள்கைகளும், பக்தி உணர்வும் இருந்தால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அரசியல் வசதிக்காக மட்டுமே அய்யப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது. பாரத மாதாவும், குரு பூஜையும் எங்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Venugopal S
செப் 27, 2025 18:34

ஏன்? ஐயப்பன் பக்தராக நடிக்கும் உரிமை பா.ஜ.,வினருக்கு மட்டுமே உண்டு என்கிறாரா இவர்?


திகழ்ஓவியன்
செப் 27, 2025 13:01

அவர் நடிக்கிறாரா என்னவோ அனால் பதினம்திட்டா அய்யப்பன் ஊர் அங்கு பிஜேபி க்கு டெபாசிட் கூட கிடைக்கலை , மக்களுக்கு தெரிகிறது யார் நடிக்கிறார்கள் என்று


Rathna
செப் 27, 2025 11:57

மருமகன் ஒரு ஜிஹாதி. கம்மிகள் வோட்டு வங்கிக்கு பல்டி அடிப்பதில் 100 வருடம் அனுபவம். ஆனால் ஆண்ட பகுதிகள் பிச்சை எடுக்கும் நிலை.


திகழ்ஓவியன்
செப் 27, 2025 13:01

சுப்ரமணிய சாமி மருமகன் யார் தெரியுமா ஒரு முஸ்லீம் என்ன செய்து விட்டர்கள் அவரை


Venugopal S
செப் 27, 2025 11:33

கடவுள் ஒருவரை மட்டுமே வணங்குவது தான் நமது கலாச்சாரம். பெற்றோர், ஆசிரியர், மற்றோர் கால்களை கழுவுவது எல்லாம் வட இந்திய கலாச்சாரம். வழக்கம் போல வட இந்தியர்கள் நம் மீது அவர்கள் கலாசாரத்தை திணிக்கும் முயற்சி இது.


Chandrasekar Mahalingam
செப் 27, 2025 10:48

கவர்னர்கள் எல்லாம் கடவுளின் காவலர்கள் போல் வேஷம் போடுகிறார்கள். அங்கிருந்து வந்ததால் மத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இந்தியா பன்முக தன்மையுடைய பெரிய ஜனநாயக நாடு. அது அப்படியே இருத்தல் நன்று!


Rathna
செப் 27, 2025 16:28

நீங்கள் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போயி பன்முக தன்மை பற்றி படித்து வந்து சொன்னால் சந்தோஷப்படுவோம்.


vbs manian
செப் 27, 2025 09:25

கார்ல் மார்க்ஸுக்கும் ஐயப்பனுக்கு என்ன சம்பந்தம். இவர்களும் தமிழகம் போல் வேஷம்.


Iyer
செப் 27, 2025 08:53

மாதா, பிதா, குரு , தெய்வம் - குருவுக்கு அடுத்துதான் தெய்வம். குருபூஜை மிகவும் புனிதமானது.


GMM
செப் 27, 2025 06:52

குரு பூஜை ஒழுக்கத்தை கற்பிக்கும். ஆசிரியர் மாணவர் உறவை அதிகரிக்கும். மாணவ மாணவிகள் மீது ஆசிரியருக்கு தன் பிள்ளை போல் பாசம் வரும். அய்யப்பன் கோயில் பக்தர்கள் ஏராளம். அங்கு பெண்கள் செல்ல கூடாது என்றால் அதனை ஏற்க வேண்டும். கோவில் வழிபாடு முறை வகுக்கும் பொறுப்பு பூசாரி சார்ந்தது. அரசியல், நீதிபதிக்கு இதில் அதிகாரம் இல்லை. கம்யூனிஸ்ட், திராவிடம் இதனை விரும்பாது. இவர்களுக்கு குடை பிடிக்கலாம், கார் கதவு திறந்து விடலாம். ஆனால் ஆசிரியருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்ய கூடாது. ஒழுக்கத்தை மதம் ஆகுவர். பின்புலம் பிரிவினை வாதிகள். வாக்கு வங்கி மேலாளர்.


Kasimani Baskaran
செப் 27, 2025 06:41

சோ ராமசாமி என்ற தீர்க்கதரிசி இதையெல்லாம் முற்காலத்தில் சொல்லி இருக்கிறார். திராவிடர்களும், கம்மிகளும் இந்துக்கள் எழுச்சியுற்றால் அழகு குத்தி காவடி கூட எடுக்க தயங்க மாட்டார்கள். நாற்காலியில் அமர்ந்து ஊழல் செய்ய ஒட்டு முக்கியம் - அதுவும் அந்த ஓட்டுப்போடும் ஏமாளி இந்து முக்கியம். கொள்கையாவது மண்ணாவது...


திகழ்ஓவியன்
செப் 27, 2025 13:29

யார் CHO அந்த டாஸ்மாக் குடிகார நிறுவனத்தின் MD அவர் தானே அப்ப கண்டிப்பா நம்பலாம்


Kasimani Baskaran
செப் 27, 2025 13:50

திராவிடர்கள் திருடர்கள் என்பது தெரியும். அதை தடுக்கத்தான் அவர் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


கடல் நண்டு
செப் 27, 2025 06:25

இந்த பினராயி நம்ப ஒங்கோல் சர்வாதிகாரி ஓட்டுக்காக சிறுபான்மையினரை தூக்கிப்பிடிக்கும் அதே குறளி வித்தையை பின்பற்றுகிறார் …. இந்துக்கள் விழித்திட வேண்டும்…


சமீபத்திய செய்தி