உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை பாதுகாப்பு இல்லாத நகரமா? பட்னவிஸ் கோபம்

மும்பை பாதுகாப்பு இல்லாத நகரமா? பட்னவிஸ் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' நடிகர் சயிப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மட்டும் வைத்துக் கொண்டு, மும்பை பாதுகாப்பு இல்லாத நகரம் எனக்கூறுவது தவறு,'' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வந்த பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் வீட்டில் நேற்று புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் தாக்கினான். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவனை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவனை பிடிக்க 10 தனிப்படைகளை அமைத்து உள்ளனர்.இது தொடர்பாக டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது: முன்பு, சல்மான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். பெரிய நட்சத்திரங்களுக்கே அரசால் பாதுகாப்பு தரவில்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? இரட்டை இன்ஜின் அரசு சிறந்த நிர்வாகத்தையோ அல்லது மக்களுக்கு பாதுகாப்பையோ வழங்கவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.இதற்கு பதிலளித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் கூறியதாவது: இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும். இவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இதற்காக மும்பை பாதுகாப்பு இல்லாத நகரம் எனக்கூறுவது தவறு. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் மும்பை மிகவும் பாதுகாப்பான நகரம். இவ்வாறு பட்னவிஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஜன 17, 2025 09:28

மும்பய் மாடல் ஆட்சி நடக்குது.


Ramesh
ஜன 16, 2025 22:12

what's the different big and small people kejri life same for both


Mohan
ஜன 16, 2025 22:11

என்னய்யா இந்த விடியா ஆட்சி சம்பள நக்ஸல்களின் பேச்சு??. இவிங்க கிட்ட 1008 கிரிமினல் பிரச்னை, இவுங்க மற்றவங்களை தப்பு சொல்றது. அண்ணா பல்கலை கழகத்துல பாலியல் கொடுமை நடந்ததற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கறதுக்கு மனசு இல்லை. மற்ற மாநிலத்துல திருடங்க கத்தில குத்துனதுக்கு பாதுகாப்பாற்ற மாநிலம்னு சொன்னா, ஆம்ஸ்ட்ராங் படுகொலை போன்ற சம்பவங்களை மறைக்கும் நேர்மையற்ற தீயவிடியல்களையும் அவர்களின் அடிவருடிகளையும் ஒழித்தால் தான் தமிழ்நாட்டுக்கு நல்லது.


sankaranarayanan
ஜன 16, 2025 21:09

பாபா சித்திக் கொலை எப்படி செய்யப்பட்டார் என்றே கேஜரிவாலுக்கு நன்றாகவே தெரியும் உதவாக்கரை முதல்வராக இருந்தபோது பாபா சித்திக் அந்த கிராமம் வழியாக சென்றபோது அங்குள்ள மக்கள் தவறாக அவரை பிள்ளைகளை பிடிப்பிப்பவர் என்று கூறி பிடித்தனர். பிறகு அவர் தப்பித்து அருகில் உள்ள போலீசு நிலையத்திற்கு சென்று அடைக்கலம் கேட்கும்போது அங்கிருந்த போலீஸ் அவரை தரதர என்று இழுத்து போலீசு ஸ்டேஷனிலிருந்து வெளியே தள்ளி மக்களிடம் அடிவாங்கி சாக அனுமதித்தனர் அந்த சாதுவின் சாபம் உதவாக்கரை அரசுக்கு வீண் போகாமல் பழிக்குப்பழி வாங்கித்து ஆதலால் அதையும் இப்பொது நடந்த சம்பவத்தையும் கேஜரிவால் ஒப்பிட்டு கூற லாயக்கே இல்லை


venugopal s
ஜன 16, 2025 21:02

இதேபோல் நிகழ்வு தமிழகத்தில் நடந்திருந்தால் திமுக அரசை கழுவிக் கழுவி ஊற்றலாம். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு நடப்பதால் முடிந்த அளவு முட்டுக் கொடுக்க வேண்டியது தான்!


Laddoo
ஜன 16, 2025 21:17

த்ரவிஷ் மாடலின் அநியாயங்களை மத்திய அரசின் எல்லா துறைகளும் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.


V வைகுண்டேஸ்வரன், chennai
ஜன 17, 2025 00:19

வேணு கப்பல். இங்கே 40 க்கு 40, நாளைக்கு 234 க்கு 234. ஹும் இன்டி கூட்டணிக்கு கூட நம்ம இரும்பு கர தலீவரா போட மாட்டாங்க...கூத்தவால் சாவடி தாண்ட முடியுமா?


Ramesh Sargam
ஜன 16, 2025 20:26

மும்பை பாதுகாப்பு இல்லாத நகரமென்றால், சென்னை... வாழவே தகுதியற்ற நகரம், சாரி, நரகம்...


முருகன்
ஜன 16, 2025 21:05

திருப்பி அடித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


KRISHNAN R
ஜன 16, 2025 20:21

உள்ளே என்ன சேதி.....என்று தெரியவில்லை.


Narayanan Muthu
ஜன 16, 2025 20:08

கையாலாகாதவரின் முதல் வெளிப்பாடு கோபம். இதுவே தமிழ்நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு இங்குள்ள பிஜேபி மற்றும் சங்கிகளின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என பாட்னாவிஸுக்கு எடுத்து சொல்லுங்கள்.


Barakat Ali
ஜன 16, 2025 20:30

பெட்னாவிஸ் போலத்தான் துக்ளக்காரும் பேசினார் ..... அவரது அமைச்சரக பொம்மைகளும் பேசின ....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 16, 2025 21:53

தமிழ் நாட்டில் நடந்தால் கொத்தடிமைகளா குரல் கொடுப்பார்கள்...பாஜக தான் கேட்கும்....ஏன் மஹாராஷ்டிராவில் எதிர்கட்சிகளே இல்லையா அவைகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன....ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அவர்களை கேளுங்க...!!!


Mediagoons
ஜன 16, 2025 20:05

மும்பை எக்கேடு கேட்டு போனால் என்ன?


தாமரை மலர்கிறது
ஜன 16, 2025 19:51

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் பாட்னவிஸ் தான். அடுத்த பிரதமர் இவர் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை