உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாங்கிய அடியை மறந்து வாலாட்ட தயாராகும் பாக்.,!

வாங்கிய அடியை மறந்து வாலாட்ட தயாராகும் பாக்.,!

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாக்., விமானப்படை தளங்களை, அழித்தது இந்தியா. இப்படி அழிக்கப்பட்ட முகாம்கள், தற்போது மீண்டும் புனரமைக்கப்படுகின்றன; இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறதாம்.பாக்., ராணுவ தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர், சமீபத்தில் சீனா சென்று, முக்கிய தலைவர்களை சந்தித்து உள்ளார். இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுக்கு ஆதரவாக வரிகளைக் குறைத்து, இந்தியாவிற்கு அதிகப்படுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ehtgf0dn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சீனாவிலிருந்து ராணுவ தளவாடங்கள், உலக வங்கியில்இருந்து கடன், துருக்கியிலிருந்து டிரோன்கள் என, பாகிஸ்தான் பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு, காஷ்மீரிலும் பல முகாம்கள் மீண்டும் முளைத்துள்ளன; இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தீவிரமாக இறங்கியுள்ளது.பயங்கரவாத அமைப்பான, ஜெய்ஷ் - இ - முகமதுவின் தலைவர் மசூத் அசார், பாகிஸ்தானின் பல இடங்களில் கூட்டம் நடத்தி ஆதரவைத் தேடுவதுடன், தன் ஆதரவாளர்களிடமிருந்தும் நன்கொடையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்.'இந்தியா மீது, சீனா மறைமுக தாக்குதலை, பாகிஸ்தான் வாயிலாக நடத்த, தகுந்த சமயத்திற்காக காத்திருக்கிறது' என, சொல்லப்படுகிறது. 'அப்படி பாகிஸ்தான் நம் நாட்டை தாக்கினால், அந்த நாடு பீஸ் பீஸாகிவிடும்' என்கின்றனர், இந்திய ராணுவ தலைவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Rajpal
ஆக 03, 2025 22:17

பாகிஸ்தான் மற்றொரு உக்ரைன். இங்கு ரஷ்யாவுக்கு பதில் இந்தியா. நேட்டோவின் பங்களிப்பு மட்டும் இதில் இல்லை.


ஆதிகுடி கொற்கை
ஆக 03, 2025 20:49

நமக்கு சோறே இல்லன்னாலும் பரவாயில்லை !!! அந்த நாய்களை முதல்ல சாவடிக்கணும் ...


Balasubramanian
ஆக 03, 2025 16:23

பாராளுமன்றத்தில் பாக்கிற்கு வக்காலத்து வாங்கியவர்களை அனுப்பி வையுங்கள் - உடனடியாக உடனடியாக சமாதானம் ஏற்படும்


M Ramachandran
ஆக 03, 2025 16:08

பின் புல முக மாக அமெரிக்கா. பாகிஸ்தான் காசு கொடுத்து ஆயுதங்கள் வாங்கும் நிலையில் பொருளாதாரம் இல்லை. அமெரிக்கன் முதுகில் ஏறி உக்காந்துட்டான். நாடு அவன் வசம். இயக்குவது அவன். சில சில்லரைய்யகள் ராணுவ அதிகாரிக்கு கொடுப்பான் வாங்கி கிட்டு அவன் யூனிபார்மை கழட்டி அமெரிக்கன் கையில் கொடுத்து விட வேண்டியது தான்.


சந்திரசேகர்
ஆக 03, 2025 15:35

பாகிஸ்தான் நாட்டுக்காரன் எப்போதும் முட்டாளாகவே இருக்கிறான்.எவனாவது பணம் ஆயுதம் கொடுத்தால் உடனே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறான்.ஒருவேளை பாகிஸ்தான் இங்கே குண்டு வீசினால் முஸ்லிம்களும் சேர்ந்து தான் இறப்பார்கள். பிறகு பாகிஸ்தான் அழிந்து போய் விடும். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு சவால் விடுகிற இந்தியாவுக்கு பாதிப்பு வந்தால் ரெண்டு பேரும் சந்தோஷப்படுவார்கள்.ரெண்டு பேரும் உலகத்தை நாசம் பண்ணாமல் விடமாட்டானுங்க


ஜெகதீசன்
ஆக 03, 2025 14:27

சீனா மற்றும் அமெரிக்காவின் தூண்டுதல், ஆதரவு. அவர்களது ராணுவ தளவாட பெயர் கெட்டுப்போனதில் கடுப்பாகி போனார்கள் போல.


Barakat Ali
ஆக 03, 2025 14:08

மீண்டும் நிதி கேட்பதும், மீண்டும் நிதி கிடைப்பதும் அதற்குத்தான் ...... நிரந்தரத் தீர்வினை இந்தியா கண்டுபிடிக்கணும் .......


Palanisamy T
ஆக 03, 2025 13:20

அப்படியென்றால் இவர்கள் வாங்கினது அடியல்ல . இவ்வளவு நாட்களாக ஒன்றிய அரசு அப்படித்தான் பேசினார்கள். இப்போது அவர்களின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீண்டும் அப்படியொரு வாய்ப்புக் கிட்டினால் என்ன செய்ய வேண்டுமென்று ராணுவத்தினற்கு நன்குத் தெரியும் .


Ramesh Sargam
ஆக 03, 2025 12:09

பாகிஸ்தானை நாம் லேசாக கிள்ளிதான் விட்டிருக்கிறோம். ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் திருந்தமாட்டார்கள். வாலை முற்றிலும் வெட்டியெறிய வேண்டும். ஆக தவறு நம்முடையது. இனிமேலாவது இந்த கிள்ளிவிட்டு விளையாடுவதை நாம் நிறுத்தவேண்டும்.


ஆரூர் ரங்
ஆக 03, 2025 11:47

துருக்கி சீனா தமது அரசியல் சுயநலத்திற்காக வேலையற்ற பாக் இளைஞர்களுக்கு தீவீரவாத ஊக்கத்தை தருகிறார்கள். ஆபரேஷன் சிந்தூர தாக்குதல் விளைவாக பயங்கரவாத குழுக்களில் சேர சற்று தயக்கம் ஏற்பட்டுள்ளது. சிந்து சமவெளி பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் போது அங்கிருந்து பயங்கரவாதிகள் உருவாகலாம். ஒட்டு மொத்த பாகிஸ்தான் அழியும் வரை நமக்கு கஷ்டம்தான். பின்குறிப்பு. வடயிந்திய முஸ்லிம்களில் ஏராளமானவர்களுக்கு பாகிஸ்தானில் உறவினர்கள் உண்டு. அவர்களுக்கு அளிக்கப்படும் சிறுபான்மையினர் சலுகைகள் ஆபத்தில் விடலாம்.