உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த நச் பதில்

ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த நச் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுத்தால், பிறகு எப்படி இந்திரா பிரதமர் ஆக முடிந்தது,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிஎம்எஸ் வணிக கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பெண்கள் விரும்பியதை ஆணாதிக்கம் தடுத்தால், பிறகு எப்படி இந்திரா நாட்டின் பிரதமர் ஆனார். ஆணாதிக்கம் பெண்களை தடுக்காது. முக்கியமாக இந்தியா போன்ற நாட்டில் அது நடக்காது. ஆணாதிக்கம், சுதந்திர போராட்ட வீரர்களான அருணா ஆசாப் அலி, சரோஜினி நாயுடு உள்ளிட்டவர்களை தடுக்கவில்லை.ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகள் கண்டுபிடித்த கருத்து. பெண்கள் தர்க்க ரீதியாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
நவ 10, 2024 09:39

பெண் என்பதால் கௌரி அம்மாளை கேரள முதல்வராக்க கம்யூனிஸ்டு ஆக்கவில்லை. ஆக படித்த தென் மாநிலங்களில் ஆணாதிக்க எண்ணம் அதிகமுண்டு. அதே நேரத்தில் வடக்கில் வசுந்தராதேவி, மாயாவதி, மமதா ( ராப்ரி?) சுசேதா போன்ற பலர் சுய உழைப்பில் முதல்வராக முடிகிறது. தென் மக்கள் நன்மக்களாக வேண்டும்.


saravanan
நவ 10, 2024 08:48

படைப்பில் இரண்டு எதிர் வகையான பாலினங்கள். ஆணுக்கு பொருளீட்டி குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கடமை. அதில் போட்டிகள் தவிர்க்க முடியாதது ஆதிக்கம் செலுத்தியே ஆகவேண்டும். இல்லையென்றால் தோற்றுப்போய் விடுவான். வெறும் ஆர்வம் மட்டுமல்ல ஆதிக்க உணர்வும் சேர்ந்தே உலகை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பெண் என்ற காரணத்திற்காக தடையாக இருந்தவர்கள் இன்றில்லை. காலம் மாறிவிட்ட சூழலில் திறமையும், உழைப்பும் இருப்பவர்கள் அது ஆண், பெண் யாராக இருந்தாலும் விரும்பியதை அடையலாம்


அப்பாவி
நவ 10, 2024 00:13

ஒரு விதி விலக்கை வெச்சு பேசுறாரு. இந்திரா காந்தி பிரதமரான போது கணவர் ஃபெரோஸ் கிடையாது. இவரோட தமிழ்நாடு, கர்னாடகாவுல எத்தனை பெண் முதல்வர்கள் வந்திருக்காங்க? நச் நு பதில் சொல்லுங்க பாப்பம்.


rama adhavan
நவ 09, 2024 22:12

சரியான கருத்து. எந்த பாலினமாய் இருந்தாலும் முயற்சி தான் வெற்றியை தரும். பெண்களோ ஆண்களோ தனியாக எதையையும் சாதிக்க இயலாது.


Anantharaman Srinivasan
நவ 09, 2024 21:57

இந்திரா பெண்ணா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை