உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்? தமிழக காங்கிரஸ் எம்.பி., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்? தமிழக காங்கிரஸ் எம்.பி., மீது பா.ஜ., குற்றச்சாட்டு

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில், தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சதி உள்ளது,'' என்ற குற்றச்சாட்டை, கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக, கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக, எஸ்.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்நிலையில், பெண்கள் உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூறும்படி ஒரு கும்பல் என்னை தொடர்பு கொண்டது. அந்த கும்பல் கூறியபடி நடந்து கொண்டதாக, புகார்தாரர் பல்டி அடித்துள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

தர்மஸ்தலா வழக்கை எஸ்.ஐ.டி.,யிடம் கொடுக்க, முதல்வர் சித்தராமையாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனால், அவருக்கு நிறைய இடங்களில் இருந்து அழுத்தம் வந்தது. எனக்கு தெரிந்து காங்கிரஸ் மேலிடம் தான், அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். இதற்கு, தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தான் காரணம். காங்கிரஸ் மேலிடத்தின் வலதுகரமாக உள்ள அவர் தான், எஸ்.ஐ.டி., அமைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி, காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து உள்ளார். தர்மஸ்தலா வழக்கில், 'மாஸ்க்' அணிந்து இருக்கும் புகார்தாரருக்கும் , சசிகாந்த் செந்திலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகார்தாரர் கடந்த, 11 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து உள்ளார். தர்மஸ்தலா வழக்கில் சசிகாந்த் செந்திலின் சதி உள்ளது. மஞ்சுநாதா கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலை பற்றி அவதுாறு பரப்புவதன் மூலம், பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு டீம் சதி செய்கிறது. பள்ளம் தோண்டிய இடங்களில் எதுவும் கிடைக்காததால், என்ன செய்வது என தெரியாமல் காங்., அரசு முழிக்கிறது. இந்த வழக்கில் சதி இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். சதி செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்து, நம் மாநிலத்தின், மஞ்சுநாதா கோவில் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். சசிகாந்த் செந்தில் மீது நான் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க தயாராக உள்ளேன். இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில், சட்ட போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியலுக்கு வந்தது எப்படி?

தமிழகத்தின் திருவள்ளூர் - தனி தொகுதி காங்கிரஸ் எம்.பி., யான சசிகாந்த் செந்தில், 2009ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. 2009 முதல் 2012 வரை கர்நாடக மாநிலம், பல்லாரி உதவி கலெக்டர்; ஷிவமொக்கா மாவட்ட சி.இ.ஓ., சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா மாவட்டங்களின் கலெக்டர், கனிமவள துறை இயக்குநர் பதவிகளை வகித்து உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பதவியை ராஜினாமா செய்து, 2020ல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

venugopal s
ஆக 20, 2025 18:02

ஓ,இப்போது புரிந்து விட்டது, இவர் கனிமவளத்துறை உயரதிகாரியாக கர்நாடகாவில் வேலை பார்த்தவர்,அவர் கர்நாடகாவில் கனிமவள தொழிலதிபர். உங்களுக்கும் புரிந்திருக்குமே!


Kulandai kannan
ஆக 20, 2025 12:18

அவனே ஒரு கிறிப்டோ


ஆரூர் ரங்
ஆக 20, 2025 11:38

என்னது. எதிர்பார்த்த எலும்புக் கூடுகளே கிடைக்கவில்லையா? நம்ம மேலடி கமர்நாத்தை அனுப்பினா எங்கே எது வேணும்னாலும் தோண்டியெடுத்துத் தருவாரே.


sribalajitraders
ஆக 20, 2025 09:28

உண்மையை வெளி கொண்டுவருவதில் பாஜகவுக்கு ஏன் பயம்


Anand
ஆக 20, 2025 10:47

அதானே, அந்த கழிசடை சசிகாந்த் செந்தில் என்பவனை NIA கைது செய்து தூக்கி போட்டு மிதித்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும்..


Tamilan
ஆக 20, 2025 08:54

புதைந்து கிடைக்கும் இந்துமதவாத அக்கிரமங்கள் கொடூரங்களை வெளிக் கொண்டு வருவதில் பெரியாரின் தமிழகம் எப்போதும் முன்னணிதான் . அனைவரும் மோடியின் அடக்குமுறைக்கு பயந்து விடமாட்டார்கள்


Amsi Ramesh
ஆக 20, 2025 09:47

அழிக்கமுடியாத இந்து தர்மத்தின் மாண்பினை கெடுக்க அவதூறுகளை பரப்பிவிட்டு அதில் குளிர்காயும் உங்கள் மூதாதையர் வெள்ளையன் புத்தி இது - தர்மமே வெல்லும்


Anand
ஆக 20, 2025 10:42

உண்மைக்கு புறம்பாக இந்துக்களை பற்றி அவதூறு பரப்பும் கழிசடைகளை அடிக்கவேண்டும்..


V RAMASWAMY
ஆக 20, 2025 08:41

கான் கிரஸ்ஸும் அவர்களது தீய எண்ணங்கொண்ட எதிரணி கட்சிகளும் நமது விரோத நாடுக்களைப்போல் நல்ல திட்டங்களுக்கு எதிராக செயல்படும் வினோதம் கேவலமானது. மக்கள் கவனடித்து புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களுக்கு புரியவில்லை.


தேசிகன், வெள்ளனூர்
ஆக 20, 2025 07:22

இவர் ஒரு கிறிப்டோ


பா மாதவன்
ஆக 20, 2025 06:34

காசிற்காக மனம் மாறி, மதம் மாறியவர்கள் நம் தாய் மதத்தை, தாய் நாட்டை கேவலமாக சித்தரிக்க முயற்சி செய்தது அவர்கள் பெற்ற தாயை கேவலமாக நடத்துவதை விட கொடுமையானது. நாறப் பயல்கள் மனம் எப்பொழுது மாறப்போகிறதோ .... எல்லா ஆண்டவர்களும் சேர்ந்து காப்பாற்றட்டும் . நல்ல புத்தியை கொடுக்க அன்பு பிரார்த்தனைகள். .


Mahendran Puru
ஆக 20, 2025 06:28

எலும்புக் கூடுகள் கிடைத்தது நிஜம். தர்மஸ்தலாவில் கிடைத்தது நிஜம். புகார் கொடுத்தவருக்கு அழுத்தம் வருகிறது. பாஜக அழுகிறது. குற்றம் நிரூபணம் ஆகி விட்டதே.


Thravisham
ஆக 20, 2025 08:24

200ரூவா கிராக்கி


Thravisham
ஆக 20, 2025 08:27

இப்டி தினந்தோறும் 200ரூவா வாங்கி வாங்கி எவ்ளோ சேர்த்திருப்ப? ஆனா பாவ மூட்டை உன் முதுகில் டன் கணக்கில் ஏறிக் கொண்டிருக்கிறதே


Amsi Ramesh
ஆக 20, 2025 09:50

எலும்பு ஓடுகளை நான்தான் அங்கு புதைத்தேன் - என சொல்லியிருக்கிறானே ...


Rajan A
ஆக 20, 2025 06:22

கண்டிப்பாக இது போன்று இந்துக்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை