உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சதீஷ் ஜார்கிஹோளி வருங்கால முதல்வரா?

சதீஷ் ஜார்கிஹோளி வருங்கால முதல்வரா?

பெலகாவி: 'சதீஷ் ஜார்கிஹோளி அடுத்த முதல்வர்' என பெலகாவியில் பேனர் வைத்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து, சர்ச்சை நடந்து வருகிறது. 'முடா' வழக்கால் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்வார் என, காங்கிரசில் சிலர் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் பதவி எதிர்பார்க்கும் அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் என, சிலர் ரகசிய கூட்டம் நடத்துகின்றனர். இதனால் முதல்வர் சித்தராமையா எரிச்சல் அடைந்துள்ளார்.இதற்கிடையில், பெலகாவியில், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி எதிர்கால முதல்வர் என, பேனர் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பின் சார்பில், இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜார்கிஹோளி சகோதரர்கள் ஐவர், எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி, ராகுல் ஜார்கிஹோளியின் படங்கள் இடம் பெற்றுள்ளன.கர்நாடக ராஜ்யோத்சவா, தீபாவளி, வால்மீகி ஜெயந்திக்கு வாழ்த்து கூறும் பெயரில், இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சதீஷ் ஜார்கிஹோளி வருங்கால முதல்வர் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக ரக்ஷன வேதிகே ஒருங்கிணைப்பாளர் மஹதேவ் தளவாரா கூறுகையில், ''மாநிலத்தில் முதல்வர் சித்தராமையாவை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவானால், சதீஷ் ஜார்கிஹோளியை முதல்வராக்க வேண்டும். இதனால் வட மாவட்டங்களுக்கு நியாயம் செய்ததாக இருக்கும். இதற்காகவே பேனர் வைத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை