உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சடலத்துடன் உறவு பாலியல் வன்முறையா? கர்நாடக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சடலத்துடன் உறவு பாலியல் வன்முறையா? கர்நாடக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சடலத்துடன் உறவு கொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்ட கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டார். அவர் மீது கொலை செய்ததற்கான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302, பலாத்காரம் செய்ததற்காக 375 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது.விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்றம் 302வது பிரிவில் ரங்கராஜிக்கு தண்டனை விதித்தது. ஆனால் சடலத்துடன் உறவு என்பது பிரிவு 375ன் கீழ் பலாத்காரம் ஆகாது; 377ம் பிரிவு இயற்கைக்கு மாறான உறவின் வரம்பில் வராது. பிரிவு 375, 377ஐ கவனமாக படித்தால், இறந்த உடலை மனிதன் அல்லது நபர் என்று அழைக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தது. பலாத்கார வழக்கில் இருந்து ரங்கராஜ் விடுவிக்கப்பட்டார்.

உடல் கண்ணியம்

இதை எதிர்த்து 2023ல் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேற்றும், மனு மீது விசாரணை நடந்தது.அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அமன் பன்வார் வாதாடுகையில், ''இறந்த ஒருவரால் பாலியல் செயல்களுக்கு சம்மதிக்க முடியாது என்பதால், சடலத்தை பலாத்காரம் செய்வதை, பிரிவு 375ன் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த பிரிவில் உடல் என்ற வார்த்தையையும், இறந்த உடல் என்று கருத வேண்டும். பிரிவு 375ஐ ஆழமாக சென்று பார்க்கக் கூடாது. இறந்த உடல்களுக்கு, கண்ணியமும், நியாயமும் வழங்கப்பட வேண்டும்,'' என்றார். பிரதிவாதி தரப்பில் அவரது வக்கீல் வாதாடினார்.

சட்ட திருத்தம்

இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: இந்த பிரச்னையை பார்லிமென்ட் ஆராய வேண்டும். தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரலாம். இதுதொடர்பாக அரசு, பார்லிமென்ட்டிற்கு கடிதம் எழுதலாம். சடலத்துடன் உறவை குற்றமாக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. பிரிவு 377ல் திருத்தம் செய்ய வேண்டும்.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நீதிமன்றம் உட்பட சர்வதேச நீதிமன்றங்கள் சடலத்துன் உறவு கொள்வதை பாலியல் வன்கொடுமை வரம்பிற்குள் கொண்டு வர தண்டனை சட்டத்தின் பிரிவுகளை விரிவுபடுத்தி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. இதனால் கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

lana
பிப் 05, 2025 14:02

பெரும்பாலான வாசகர்கள் முழுமையாக படிக்கவில்லை. அவனுக்கு கொலை குற்றம் க்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. கற்பழிப்பு க்கு தான் இந்த விடுவிப்பு. நீதிபதி சட்டம் இல்லாத நிலையில் தண்டனை வழங்க முடியாது. இவ்வளவு நாள் அந்த சட்டத்தை மாற்றம் செய்ய வேண்டியது சட்ட/ பாராளுமன்றம் கடமை. தற்போது அதை தான் நீதிபதி குறிப்பிட்டார். இது போல பல சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஆனால் எல்லா கூட்ட தொடர் வெட்டியா கத்தி கூப்பாடு போட்டு முடிகிறது. எனினும் உச்சநீதிமன்றம் தானே முன்வந்து சட்ட திருத்தம் செய்ய அதிகாரம் உண்டு எனில், அதை செய்ய வேண்டும்


அப்பாவி
பிப் 05, 2025 21:16

என்ன பெருசா தண்டிச்சுரப் போறாங்க? அப்பிடியே ஆயுள்தண்டனை குடுத்தாலும் காந்தி பொறந்தார்னு மூணு, நாலு வருஷத்தில் விடுதலை நிச்சயம்.


Nandakumar Naidu.
பிப் 05, 2025 12:37

நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு இவ்வாறு நடந்திருந்தால் கூட இதே போல தீர்ப்பு வருமா?


Barakat Ali
பிப் 05, 2025 10:49

சடலத்துடன் உறவு கொள்வது மனநலம் குன்றிய செயலாகப் பார்க்கப்படுவதால் அதை எப்படி பாலியல் வல்லுறவாகக் கருத முடியும்? சராசரி மனநலன் உள்ளவர் அச்செயலைச் செய்ய வாய்ப்பில்லையே ????


அசோக்ராவ்
பிப் 05, 2025 09:02

சூப்பர் காமெடி சட்டங்கள். அதையும் மிஞ்சும் லூ சுத் தனமான நீதிமன்ற கருத்துக்கள். நம்ம சட்ட மேதைகள் வகுத்த புண்ணாக்கு சட்டங்கள்


R S BALA
பிப் 05, 2025 08:52

இதுதான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குஉதவாது என்பது.. உணர்வுக்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட தீர்ப்புதானே மனுநீதி சோழன் தீர்ப்பு, இயற்றப்பட்ட சட்டத்திற்க்காக காத்திருக்கவில்லையே..


Kasimani Baskaran
பிப் 05, 2025 07:17

கொலைக்கு தண்டனை கொடுத்து பெண்ணுக்கு நீதி வழங்கவேண்டும்.


Karthik
பிப் 05, 2025 07:06

அப்படி என்றால் பாலியல் வன்புணர்வு செய்ய நினைப்போர் இனி கொலை செய்துவிட்டு வன்புணர்வும் செய்யலாம். அது குற்றமல்ல அப்படித்தானே யுவர்ஆனர்?? உங்கள் குடும்பத்தில் நடந்தாலும் இது பொருந்தும்தானே??


Sankare Eswar
பிப் 05, 2025 06:59

ஏழைக்கு ஒன்று பணக்காரனுக்கு ஒன்று... ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு கருத்து... சட்டம் தப்பா? இவர்கள் ஒழுங்கா படிக்கவில்லையா? அட... போங்கடா ..... நீங்களும் ... உங்க ..... நான் இந்த செய்திக்கும் மட்டும் சொல்லல.... இவர்கள் வாழ் நாள் பதவி பண முதலைகளுக்கு பஞ்சாயத்து செய்யவே முடிந்துவிடுகிறது. ஏழைகள் இவர்களிடம் நீதி கேட்பதைவிட வெந்ததை தின்று வேக்காடு போவதே மேல். இவர்களிடம் சென்று மன உளைச்சலுக்கு ஆளாகி சாவதை விட சண்டை காரன் காலில் வீழ்வது மேல்.


KRISHNAN R
பிப் 05, 2025 06:42

சட்ட ரீதியாக சரி..ஆனால் இவன் மனிதனே இல்லை... இவனை விடுவித்த செயல்....கொடுமை


Neutrallite
பிப் 05, 2025 10:06

எனக்கு புரிந்தவரை அவனை விடுவிக்கவில்லை. 302 பிரிவின் கீழ் தண்டனை உண்டு. மாற்று பிரிவின் கீழ் தனி தண்டனையா என்ற "நுட்பமான" கேள்வி நமது சட்டங்கள், comma, hyphen முதற்கொண்டு சிற்சிறு விஷயங்கள் வழியாக நடப்பவை, பெரியதான குற்ற பின்னணியை விட்டுவிடுகின்றன தான் இங்கே விவாதிக்க படுகின்றது.


nagendhiran
பிப் 05, 2025 05:43

என்ன ஒரு அற்புதமான தீர்ப்பு?