உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? பா.ஜ., தலித் எம்.பி. ஆதங்கம்

உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? பா.ஜ., தலித் எம்.பி. ஆதங்கம்

பெங்களூரு: மத்திய அமைச்சர் பதவி உயர் வகுப்பினருக்கு தானா என கர்நாடகா பா.ஜ., தலித் எம்.பி., ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.கர்நாடகா மாநிலம் விஜயபுரா லோக்சபா பா.ஜ., தலித் எம்.பி., ரமேஷ் ஜிகாஜினாகி 75, இம்முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது, ஏழு முறை எம்.பி.யாக இருந்து வருகிறேன். 2016-2019ம் ஆண்டுகளில் மத்திய இணை அமைச்சராக இருந்துள்ளேன்.இம்முறை எனக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் வழங்கவில்லை? . தலித் என்பதாலா? உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவியா ? இதனை என் ஆதரவாளர்களே என்னிடம் கேட்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூலை 10, 2024 15:29

இத்தனை வயதாகியும் இன்னும் பாஜகவைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே!


எஸ் எஸ்
ஜூலை 10, 2024 10:10

பிஜேபி யில் 75 வயது ஆனால் பதவி கிடையாது என்பது தெரியாதா?


Mario
ஜூலை 10, 2024 09:10

எலெக்ஷன்ல நிக்காம பின் வாசலில் மந்திரி ஆனா உயர் வகுப்பினருக்கு தான் மத்திய அமைச்சர்


தமிழ்வேள்
ஜூலை 10, 2024 08:46

கர்நாடக வகையறா சீட்டா போல... இவர்களுடைய நிலக்கிழார் ஆண்டைகளின் அட்டகாசம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள்...- பேசினால் நடப்பதே வேறு- ஆனால் எந்த வம்பு வழக்குக்கும் போகாத எஃப் சி சாதிகளைப் பற்றி மட்டுமே தாறுமாறாக பேசுவார்களாம்... திமுகவின் கர்நாடக முன்னாள் ஆக இருந்திருக்க வாய்ப்பு உண்டு...


rsudarsan lic
ஜூலை 10, 2024 07:43

வயது 75 வயது 75 அடுத்த வருடம் 76 அப்புறம் 77. மந்திரி பதவி


சந்திரசேகர்
ஜூலை 10, 2024 07:20

இந்தியாவில் சாதிக்கொரு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றால் ஆயிரம், ரெண்டாயிரம் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2024 06:44

நாட்டையே ஆள திறமைதான் முக்கியம். சுதந்திரம் முதலே எல்லா அமைச்சரவைகளிலும் பட்டியலின அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள்.( ராசா மாதிரி கூட). என்ன பயன்?


Rajarajan
ஜூலை 10, 2024 06:34

உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. பதவி வந்தால் என்ன ஆகும்? எப்படி நடந்துபீங்க? உங்களை ஒருத்தர் கேள்விகேட்க முடியுமா? அடங்க மறு, அத்துமீறு, திமிறி அடி னு சொன்னது யார்? ஒவ்வொருத்தர் மேலயும் பத்து வழக்கு இருக்கணும் சொன்னது யார்? இதெல்லாம் அடிப்படை தகுதியா இருந்தா, முதல்ல உங்க நிறுவனத்துல நீங்க வேலை கொடுப்பீர்களா ??


நிக்கோல்தாம்சன்
ஜூலை 10, 2024 06:07

பல தலித்துகள் , ஜனாதிபதி என்று இருப்பது ரமேஷுக்கு தெரியாது , திராவிட ஸ்டாக்கு மாதிரி பேசுவதை பார்த்தல் தெரிகிறது


Rama
ஜூலை 10, 2024 04:50

May be age-barred according to BJP norms. Why attribute to e?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை