மேலும் செய்திகள்
ரூ.3,811 கோடி அள்ளிய அரசியல் கட்சிகள்: பாஜவுக்கு அதிகம்
29 minutes ago
ஆர்எஸ்எஸ் பணிகள் வெளிப்படையானவை: மோகன் பகவத்
1 hour(s) ago
மும்பை:''அஜித் பவாருடன் நான் நிகழ்த்துவது கொள்கை ரீதியிலான போர் தானே தவிர, தனிப்பட்ட குடும்ப சண்டை இல்லை. என்னை எதிர்க்க அவர்கள் வசம் வலுவான வேட்பாளர் இருந்தால், அவரை சந்திக்க தயார்,'' என, தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவைச் சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்துஉள்ளார்.மஹாராஷ்டிராவின் தேசியவாத காங்.,கில் அங்கம் வகித்த அஜித் பவார், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் விலகி வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஆனார். தேசியவாத காங்., பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆதரவு உடைய அஜித் பவார் அணியை உண்மையான தேசியவாத காங்., என, தேர்தல் கமிஷனும், சபாநாயகரும் அறிவித்தனர்.கட்சியின் பெயரும், கடிகார சின்னமும், அஜித் பவார் வசம் வந்தது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு என பெயர் மாற்றம் பெற்றது.இந்நிலையில், வருகிற லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில், சரத் பவாரின் மகளும், தற்போதைய எம்.பி.,யுமான சுப்ரியா சுலேவை எதிர்த்து, அஜித் பவாரின் மனைவி சுனேந்திரா பவார் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் பரவின. இது குறித்து, சுப்ரியா சுலே நேற்று கூறியதாவது:அவர்கள் வசம் வலுவான வேட்பாளர் இருந்தால் அவரை நிறுத்தட்டும். அவருடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். விவாதத்திற்கான தலைப்பு, இடம், நேரம் முடிவு செய்து சொல்லட்டும். நான் தயார். அஜித் பவாருடன் எனக்கு இருப்பது கொள்கை ரீதியிலான போர். இதில் தனிப்பட்ட குடும்ப சண்டை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
29 minutes ago
1 hour(s) ago