மேலும் செய்திகள்
யோகேஸ்வர் மீது குமாரசாமி அதிருப்தி?
31-Aug-2024
மாண்டியா : ''அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காங்கிரசில் இருந்து என்னை யாரும் சந்திக்கவில்லை. அத்தகைய எண்ணமும் எனக்கில்லை,'' என பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் தெரிவித்தார்.சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் போட்டியிட பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் சீட் கேட்டு, மேலிட தலைவர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில், மாண்டியாவில் நேற்று யோகேஸ்வர் அளித்த பேட்டி:தேர்தலோ, இடைத்தேர்தலோ வரும் போது, தொகுதிக்கு சென்று, மக்களுக்கு வாக்குறுதி அளிப்பது சகஜம். அதுபோன்று துணை முதல்வர் சிவகுமார், இத்தொகுதிக்கு அடிக்கடி வந்து வாக்குறுதி அளிக்கிறார்.நான், காங்கிரசில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. அது பற்றி, நான் நினைக்கவில்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காங்கிரசில் இருந்து யாரும் என்னை சந்திக்கவில்லை. தற்போது அரசியலில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடியாது.'முடா' வழக்கில், முதல்வர் சித்தராமையா சட்ட போராட்டம் துவக்கி உள்ளார். இது தொடர்பாக முழுதாக எனக்கு தெரியாது. அதுபோன்று தேர்தல் பத்திரம் வழக்கு தொடர்பாக, மத்திய அமைச்சர் மீது பதியப்பட்ட வழக்கு குறித்தும் எனக்கு தெரியாது.அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள், தேசிய அளவில் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளன. எங்கள் கட்சி தலைவர்கள் என்ன முடிவெடுத்துள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தலில் போட்டியிட தொகுதி மக்கள் எனக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். தொண்டனாக, கட்சி சொல்வதை கேட்டு நடப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.'அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என யோகேஸ்வர் கூறியிருப்பது, தான் காங்கிரசில் இணைய போவதை மறைமுகமாக கூறுகிறார்' என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
31-Aug-2024