உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளித் துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு; இஸ்ரோ தலைவர் பெருமிதம்

விண்வெளித் துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு; இஸ்ரோ தலைவர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: விண்வெளி துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவு உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நிருபர்களிடம், இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, அனைவரும் பங்களிக்க வேண்டும். நமது விண்வெளித் திட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. ககன்யான் திட்டம் ஒரு தேசியத் திட்டம். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) ஆக்ரா கிளை, இந்த திட்டத்துக்கு தேவையான பாராசூட்டுகளை உருவாக்கி வருகிறது. சி.எஸ்.ஆர்., அமைப்பின் ஆய்வகங்களும் இந்த திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. ககன்யான் கலம் விண்வெளியில் இருந்து பூமிக்கு கீழே வரும்போது, அதை மீட்பதற்கான திட்டத்தில் விமானப்படை ஈடுபடுத்தப்படுகிறது. இப்படி வெவ்வேறு துறையினரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகிறோம். பெரிய ஊக்கம்நவம்பர் 2ம் தேதி, நமது சொந்த பாகுபலி ராக்கெட் LVM3 M5 ஐப் பயன்படுத்தி இந்தியாவின் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 2020ம் ஆண்டில், மத்திய அரசு தனது விண்வெளித் துறை சீர்திருத்தங்களை அறிவித்தபோது, ​​பிரதமர் மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்திய விண்வெளித் துறை ஒரு பெரிய ஊக்கத்தைப் பெற்றது. 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரனின் தென் துருவத்திற்கு தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறிய ஒரு வரலாற்று நாளாகும்.

80 சதவீத பங்களிப்பு

உலக விண்வெளி அறிவியலுக்கு இது முக்கியமான தருணம் ஆகும். விண்வெளி நிறுவனம் நவம்பர் 21ம் தேதி,1963ம் ஆண்டு அன்று இந்திய மண்ணிலிருந்து ஒரு அமெரிக்க தயாரிப்பான சிறிய ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது. அந்த எளிமையான தொடக்கத்திலிருந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரோவிற்கு மற்றொரு முக்கியமான சந்தர்ப்பமாகவும் மைல்கல்லாகவும் அமைந்தது. நாங்கள் நிசார் செயற்கைக்கோளை ஏவினோம். இஸ்ரோ ஏவும் ஒவ்வொரு ராக்கெட்டிலும் இந்தியத் தொழில்துறையின் 80 சதவீத பங்களிப்பு உள்ளது.

330 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

அந்தக் காலகட்டத்தில், நாட்டில் விண்வெளித் திட்டங்களுக்காக மூன்று முதல் நான்கு வரையிலான ஸ்டார்ட்அப்கள் மட்டுமே வேலை செய்தன. இன்று, நாட்டில் 330க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
நவ 06, 2025 19:18

பாராட்டப்பட வேண்டிய முயற்சியே. அண்மையில் MSN செய்தியில் "விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம்" என்ற காணொளி சிறப்பாக இதனை விவரிக்கிறது. தொடக்கத்தில் காங்கிரஸ் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு தந்தாலும், பின்னாளில் அதனை முன்னெடுத்துச் செல்லவில்லை மோடி அரசு செய்தது இவர்களும் சாதித்தார்கள் இந்திய ராணுவம் போன்று ஜாதி மத இன மொழி என்று எந்த வேறுபாடுமின்றி நம் விஞ்ஞானிகள் சாதிக்கின்றனர் இது தொடரட்டும்


சமீபத்திய செய்தி