உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய சாதனையை நோக்கி பயணிக்கும் இஸ்ரோ

புதிய சாதனையை நோக்கி பயணிக்கும் இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: தனித்தனியான இரு விண்கலன்கள் விண்வெளிக்கு சென்று இணையச் செய்யும் புதிய சாதனையை இஸ்ரோ படைக்க உள்ளது. இஸ்ரோ சார்பில் இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் தயார் நிலையில் நேர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் டிச.,26ல் விண்ணில் ஏவப்படுகிறது. நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை அவசியம்.தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணையச் செய்வதற்காக இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த நான்காம் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை