உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைக்கோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோ - நாசா இணைந்து, 12,750 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள, நிசார் செயற்கைக்கோள், இன்று (ஜூலை 30) மாலை 5:40 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளில் இருந்து வெற்றிகரமாக பிரிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த செயற்கைக்கோள், பூமியை அங்குலம் அங்குலமாக துல்லியமாக படம்பிடித்து அனுப்பும்.இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து, உலகின் மிக விலையுயர்ந்த, நிசார் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. 12 நாட்கள் இந்த செயற்கைக்கோள், 12 நாளுக்கு ஒரு முறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து அனுப்பும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=upxl5ddt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். குறிப்பாக இயற்கை பேரிடர் சூழல்களை கையாள்வதற்கான ஆய்வுகளில், நிசார் செயற்கைக்கோள் திட்டம் உதவிகரமாக இருக்கும். அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், பூகம்பங்கள், சுனாமி, எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவுகள், பனிப்பாறைகள் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் உன்னிப்பாக கண்காணிக்கும்.இதற்காக, நிசார் செயற்கைக்கோளில் எஸ்.ஏ.ஆர்., எனப்படும் சிந்தெடிக் அப்ரேச்சர் ரேடார் என்கிற சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேடாரின் உதவியுடன் நல்ல தெளிவுத்திறன் உடைய படங்களை எடுக்க முடியும்.இந்த செயற்கைக்கோளில் நாசா சார்பில், எல் - பேண்ட் ரேடார், ஜி.பி.எஸ்., ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட, ஹார்ட் டிரைவ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அதே போல் இஸ்ரோ சார்பில் எஸ்-பேண்ட் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.நிசார் செயற்கைக்கோளை கடந்த 2024ல் விண்ணில் ஏவ இரு நாடுகளும் திட்டமிட்டன. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தப் பணி தள்ளிப் போனது. தற்போது அனைத்தும் தயார் ஆனதால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின், ஜிஎஸ்எல்வி- எப்16 ராக்கெட் வாயிலாக, மாலை 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூமியை தாழ்வாகச் சுற்றிவரும் வகையில் இந்த செயற்கைக்கோள் பூமியின் கீழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.மொத்தம், 12,750 கோடி ரூபாய் செலவில், 2,392 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதன் மூலம் இஸ்ரோ - நாசா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளன.

நிசார் சிறப்பம்சங்கள்...

* நிசார் செயற்கைக்கோளை உருவாக்க சுமார் ரூ.12,750 கோடி செலவு. அமெரிக்க மதிப்பில் 1.5 பில்லியன் டாலர்* 'மொத்த எடை 2,392 கிலோ* பூமியை அங்குலம் அங்குலமாக படம்பிடித்து வரைபடம் தயாரிக்கும்* 12 நாளுக்கு ஒருமுறை பூமியை 3டி முறையில் படம்பிடிக்கும்* நாசா சார்பில், எல் - பேண்ட், இஸ்ரோ சார்பில், எஸ் - பேண்ட் தொழில்நுட்பம் புகுத்தம்* உலகம் முழுதும் பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும்* இயற்கை பேரிடர் தொடர்பான தரவுகளை இந்தியா, அமெரிக்காவுக்கு அனுப்பும்* ஒரு செயற்கைக்கோளில் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டது இதுவே முதல்முறை

மாடியில் இருந்து...

சென்னைவாசிகள் இந்த செயற்கைக்கோளை வீட்டின் மாடியில் இருந்து வடகிழக்கு திசையில் பார்த்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 30, 2025 21:15

வாழ்த்துக்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 30, 2025 19:07

இது பிஜேபி அரசின் மற்றொரு சாதனை. இஸ்ரோவை தனியாரிடம் கொடுத்தால், இன்னும் சிறப்பாக பணியாற்றுவார்கள். நாசா செய்ததைவிட எலான் மஸ்கின் ஸ்பைஸ் க்ஸ் சிறப்பாக செயல்படுகிறது.


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 17:55

இந்த செயற்கைகோளில் பூமியை படம் பிடிப்பதற்காக பல அம்சங்கள் இருந்தாலும் இதன் முக்கிய நோக்கம் நம் எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான், மேலும் புது எதிரியான பங்ளாதேஷ் இவைகளை உன்னிப்பாக கவனிப்பதற்காக அனுப்பப் பட்டதாகும்.


சமீபத்திய செய்தி