மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
2 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
2 hour(s) ago
ஷிவமொகா: “முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஒரு நல்ல நடிகர். நடிகர்கள் முகத்தில் சாயம் பூசுவர். ஈஸ்வரப்பா நாக்குக்கு சாயம் பூசுவார்,” என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் கிண்டல் செய்துள்ளார்.ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:ஈஸ்வரப்பா பிற்படுத்தப்பட்டோர் பெயரில், மிக அதிகமான லாபம் அடைந்துள்ளார். அவர், இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இல்லை. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, ஈஸ்வரப்பா தரக்குறைவாக பேசுகிறார். இதை பா.ஜ., தலைவர்கள் கண்டிக்காதது வருத்தமளிக்கிறது.முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, அரசியல் ரீதியில் நல்ல நடிகர். நடிகர்கள், முகத்துக்கு சாயம் பூசுவர். ஈஸ்வரப்பா நாக்குக்கு சாயம் பூசுவார். இவரது பின்னணியில் சில பேட்டரிகள் உள்ளன. இவை சில நாட்கள் எரியும். பேட்டரிகள் செயலிழந்தால், இவரும் மவுனமாகிவிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago