உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை; காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் போதும்: உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உமர் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநில அந்தஸ்து என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமை. மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.

கவலை இல்லை

என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக. எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். இந்தக் கதை எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும். இங்குள்ள ஒரு செய்தித்தாளில் யார் இந்தக் கதையைப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இது எம்.எல். ஏ,க்களை பயமுறுத்துவதற்காக மட்டுமே போடப்பட்டது. பயமுறுத்த முயற்சிக்காதீர்கள் மாநில அந்தஸ்து வழங்க சட்டசபை கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாநில அந்தஸ்து வழங்கியமறுநாள் நான் கவர்னரிடம் சென்று சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பேன். எங்களை பயமுறுத்த முயற்சிக்காதீர்கள். மாநில அந்தஸ்து எங்கள் உரிமை, அதை எங்களிடம் திருப்பி கொடுங்கள். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

மணியன்
ஜூன் 25, 2025 09:56

தமிழகத்தை 10 ஆண்டுகளுக்கு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும். மக்கள் திராவிட கொள்ளையர்களிடமிருந்து விடுதலை பெறுவர்.


Rajasekar Jayaraman
ஜூன் 25, 2025 07:14

திராவிட கூட்ட மடலுக்கு வந்து விட்டான் கண்டிப்பாக உன்னை நம்பி மாநில அந்தஸ்து தரமுடியாது உங்கள் ஆட்சிக்கு பகல்காம் நிகழ்வே சாட்சி.


Iyer
ஜூன் 25, 2025 01:34

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ஒருபோதும் கொடுக்கக்கூடாது. காஷ்மீர் எப்போதுமே U T யாகவே இருக்கட்டும். மேற்கு வங்கத்தையும் U T யாக மாற்றி 10 வருடத்துக்கு மத்திய அரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும். மேற்கு வங்கத்தில் உள்ள கடைசி பங்களாதேஷியும் ரோஹிங்க்யாவும் விரட்டப்படும் வரை அது U T யாக தொடரட்டும்


c.mohanraj raj
ஜூன் 25, 2025 00:08

மாநில அந்தஸ்தாவது வெங்காயமாவது இவர்கள் குடும்பத்தை ஒழித்தால் தான் பாகிஸ்தான் தீவிரவாதம் காஷ்மீரில் வராமல் இருக்கும்


Kumar Kumzi
ஜூன் 24, 2025 20:52

பாகிஸ்தான் கைப்பற்றி வைத்திருக்கும் காஷ்மீருக்கு போய் மாநில அந்தஸ்து கேளுங்க


தமிழ்வேள்
ஜூன் 24, 2025 20:23

மாநில அந்தஸ்து பாகிஸ்தான் கள்ள உறவுக்கு வழிவகுக்கும்.. வேண்டாம்...பிற நாடுகளோடு- குறிப்பாக ஆப்ரஹாமிய மத நாடுகள் - எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் ஆக இருப்பது மட்டுமே தேச நலனுக்கு உகந்தது.. புதுச்சேரி போல குறைந்த அதிகாரம் உடைய சட்டமன்ற அமைப்பு வேண்டுமானால் இருக்கலாம்... தமிழகம் கூட ஒரே மாநிலமாக இருப்பது கூட தேசியவாத மனநிலைக்கு உகந்ததல்ல... ஒற்றை மொழி பேசும் மக்களை ஒரே மாநிலமாக வைக்காமல் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களாக பிரித்து வைப்பதே பாதுகாப்பு காரணங்களுக்கு ஏற்றது..


Ramesh Sargam
ஜூன் 24, 2025 19:57

காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில், இப்பொழுது இந்த மாநில அந்தஸ்து பிரச்சினை. தேவையா?


GMM
ஜூன் 24, 2025 19:46

ஒரு மாநில நிர்வாகம், பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் மாற்ற வேண்டும். மொழி மாநிலங்கள் காங்கிரஸ் வகுத்த பிரிவினை திட்டம். தமிழகம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்கள் மீது திராவிட இயக்கம் தமிழ் மொழியை திணிக்க காரணம் மொழி மாநிலம். தன் உறவை பிரிந்து கலாச்சாரம் இழந்து விட்டனர். தனிமைக்கு புகலிடம் மத மாற்றம். நாட்டு மக்கள் இணைக்க தேசிய மொழி அவசியம். இந்தியை எளிமைபடுத்தி அனைவரும் ஏற்க செய்ய வேண்டும்.சிறிய மாநிலம் இனி கூடாது. நீதிமன்றம் வழக்கில் உருவாக்கிய இரட்டை அதிகாரம் ஒழிக்க வேண்டும்.


சிட்டுக்குருவி
ஜூன் 24, 2025 19:39

முதல்ல இப்போதிருக்கின்ற முதல்வர் பதவியை பயன்படுத்தி வரும் காலங்களில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் ,தீவிர வாதத்தை முற்றிலுமாக ஒழித்துக் காட்டி ,மக்களிடையே பாதுகாப்பு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி ,சுற்றுலாவை மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டினாள் மாநில அந்தஸ்து தானாகவரும் . அதற்காக நீங்கள் பதவியை துறக்கவேண்டாம் .தங்களின் மாநில உற்பத்தி பொருள்களை நாடு முழுவதிலும் கிடைக்கவும் ,ஏற்றுமதிகளையும் பெருக்க ஏற்பாடு செய்யுங்கள் .


Venukopal, S
ஜூன் 24, 2025 19:32

நீங்கள் எல்லாரும் ஒடனே உங்க பூர்வீகத்தை (பாக்கிற்கு) போய்விடுங்க. உடனே காஷ்மீர் thani மாநிலம். எல்லா பண்டிட்களும் நிம்மதியா வாழ்வார்கள்


A viswanathan
ஜூன் 24, 2025 23:38

மாநில அந்தஸ்து கிடைக்கலாம். ஆனால் 370 ஐ எதிர் பார்க்க வேண்டாம்.