உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரதம் என்றே அழைக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்

பாரதம் என்றே அழைக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: '' பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. எழுதும் போதும், வாசிக்கும் போதும் பாரதத்தை பாரதம் என்றே குறிப்பிட வேண்டும்,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசினார்.கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய கல்வி தொடர்பான மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gomfp1c2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒருவர் எந்த இடத்திலும் தனியாக வாழ உதவுவதாக கல்வி இருக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் சுயமாக நிற்கவும், உங்கள் குடும்பத்தை அப்படியே வைத்திருக்கவும் முடியும் என்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.மற்றவர்களுக்காக தியாகம் செய்வதையும், வாழ்வதையுமே 'பாரதிய' கல்வி கற்பிக்கிறது. ஒருவர் சுயநலமாக இருக்க கற்றுக் கொடுத்தால் அது கல்வி கிடையாது. அதிகாரத்தையே உலகம் புரிந்து கொள்கிறது. இதனால், பொருளாதார ரீதியில் பாரதம் வலிமையானதாகவும், செல்வந்தராகவும் இருக்க வேண்டும்.பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. பாரதம் என்றால் இந்தியா என்பது உண்மைதான். ஆனால்தான், எழுதும்போதும், வாசிக்கும் போதும் பாரதம் என்பதை பாரதமாக இருக்க வேண்டும். பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும். பாரதம் என்ற அடையாளம் மதிக்கப்படுகிறது. ஏனென்றால் அது பாரதம். நீங்கள் உங்கள் அடையாளத்தை இழந்தால், உங்களிடம் வேறு எந்தத் தகுதி இருந்தாலும் உலகில் எங்கும் மதிக்கப்பட மாட்டீர்கள். பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள். இதுதான் பொதுவிதி. தற்போதும், வளர்ந்த பாரதம், விஸ்வகுரு பாரதம் போருக்கு காரணமாக இருக்காது. போரை துவக்காது. மெக்சிகோ முதல் சைபீரியா வரை சென்றுள்ளோம். வெறும் காலில் நடந்துள்ளோம். சிறிய படகில் பயணித்துள்ளோம். நாங்கள் யாருடைய பிரதேசத்தையும் ஆக்கிரமித்து அழிக்கவில்லை. யாருடைய ராஜ்யத்தையும் நாங்கள் அபகரிக்கவில்லை. அனைவருக்கும் நாகரிகத்தை கற்றுக் கொடுத்தோம். இந்திய அறிவின் பாரம்பரியத்தை நீங்கள் காண்கிறீர்கள். மரபின் வேர் அந்த உண்மையில் உள்ளது.சனாதன தர்மம் எழுச்சி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். சனாதன தர்மம் எழுச்சி பெற, ஹிந்து தேசத்தின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்று யோகி அரவிந்த் கூறினார். இவை அவரது வார்த்தைகள், இன்றைய உலகிற்கு இந்த தொலைநோக்குப் பார்வை தேவை என்பதை நாம் காண்கிறோம். எனவே, முதலில் பாரதம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 29, 2025 03:32

முழு இந்திய துணைக்கண்டத்தையும் ஆண்ட ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும், வடக்கிந்தியர்கள் இவனுங்க தலையிலே கல்லை வைத்து தமிழ்நாட்டுக்கு பொதிசுமக்க வைத்துள்ளார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவுக்கே தமிழ்நாடுன்னு பெயர் வைத்தாலும் தகும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 23:11

புரதம் வலுவான உடல் வளர்ச்சிக்கு மிக அவசியம். எல்லாவற்றிலும் தேவையான அளவு சேர்க்க வேண்டும்.


பெரிய குத்தூசி
ஜூலை 28, 2025 21:26

ஜெய் பாரத்


Sundar R
ஜூலை 28, 2025 18:34

ஆர்எஸ்எஸ் சர்சாங்க் சாலக் பெருமதிப்புக்குரிய ஐயா மோகன் பாகவத் அவர்கள் நம் எல்லோருக்கும் நல்லதையே சொல்கிறார். எங்கள் நண்பர்களில் பலருக்கு அவர்கள் வழக்கமாக பேசும் சில தமிழ் வார்த்தைகள் அடியோடு பிடிக்காததால், கேட்பதற்கு இனிமையான வேறு நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுகிறார்கள். என்ன என்ன வார்த்தைகளோ? இந்தியா என்பதற்கு பதில் பாரதம் அல்லது ஹிந்துஸ்தான். ஹிந்தித் காரர்கள் அனைவரும் "பாரத்" என்று தான் நம் நாட்டை அழைக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் "பாரத வர்ஷே" "பரதக் கண்டே" என்று நம் நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்கா என்பதைத் தவிர்த்து விட்டு துர்க்கை அம்மன். துர்கா என்ற பெயரில் நம்மை அறிந்தவர்கள் அருகில் இருந்தால், அவரை "ஏம்மா" என்று தான் கூப்பிடுவோமே தவிர அவருடைய பேரைச் சொல்லி கூப்பிடுவதில்லை. உதயசூரியன் என்பதற்கு பதில் பாரதியார் பாண்டிச்சேரியில் வெளியிட்ட பத்திரிகையின் பெயரான சூர்யோதயம்" என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறோம். இந்த வார்த்தையை கூறும்போது மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. விடியல் என்பதற்கு பதில் காலைபுலர்வு. I.N.D.I.A. என்பதற்கு பதில் "இண்டி" கூட்டணி, புள்ளி வெச்ச கூட்டணி அல்லது புள்ளி ராஜா கூட்டணி ஒன்றிய அரசு என்பதற்கு பதில் பாரத அரசு, மத்திய அரசு அல்லது கேந்திரிய சர்க்கார். திமுக என்பதற்கு பதில் கள்ளச்சாராய கட்சி, கஞ்சா கட்சி, தார் பெயிண்ட் கட்சி அல்லது "தமிழகத்திற்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சி". பிங்க் கலர் இலவச பஸ் எதிரில் வந்தால், முகத்தைத் திருப்பிக் கொள்வோம். பலர் அந்த பஸ்ஸை நோக்கி காரித்துப்புகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சிகளை "எடுபிடி" கட்சிகள் அல்லது "மானங்கெட்ட கட்சிகள்" அல்லது "உட்கார்ந்த இடத்திலேயே கல்லா கட்டும் கட்சிகள்" என்று அழைக்கிறார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 29, 2025 03:28

அவாள்ஸ் எல்லாம் உங்க பிரெண்ட்ஸ்.. சரி தான்..


வினய்
ஜூலை 28, 2025 18:08

வாழ்க பாரதம் வளர்க பாரதம்


venugopal s
ஜூலை 28, 2025 17:02

முடியாது, என்ன பண்ணுவீர்கள்? இந்தியா என்று தான் அழைப்போம் !


Subburamu Krishnasamy
ஜூலை 28, 2025 15:59

Yes We are the peoples of Bharatham Bharath Mathaki jai


தஞ்சை மன்னர்
ஜூலை 28, 2025 11:24

60 முஸ்லிம் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆலோசனை நேற்றுதான் இந்த ஆளு பேசி இருக்கார் என்று தகவல் வந்தது இப்போ இப்படி இதற்குத்தான் நான் முன்பே சொல்லி இருக்கேன் இவர்களால் நாட்டில் குழப்பத்தை தவிர வேறு ஏதும் கொடுக்க முடியாது நாடு சுதந்திரம் முன்பும் பின்பும் இவர்களால் அடைந்த துன்பமே அதிகம் தவிர இன்பம் என்று ஒன்று கூட கிடையாது


Mariadoss E
ஜூலை 28, 2025 08:38

ரொம்ப முக்கியம். பேரு வச்சிங்களே சோறு வச்சிங்களா என்ற காமெடி தான் ஞாபகம் வருது.....


Padmasridharan
ஜூலை 28, 2025 04:12

கல்வியின் நோக்கம்: உண்மைகளை காப்பாற்ற வேண்டும். பொய் பேசுபவர்களையும், லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்களையும் எதிர்த்து போராட வேண்டும். வெறும் பொருளாதாரத்தை உயர்த்தினால் மட்டும் போதாது சாமி.


புதிய வீடியோ