உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மம்தா ஆறுதல்

நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மம்தா ஆறுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது' என பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் மம்தா உறுதி அளித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25,700 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள் 2016ல் நிரப்பப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தகுதியில்லாத நபர்கள் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் ஆனது தெரியவந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=llzgpweh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த கோல்கட்டா ஐகோர்ட், 2016ல் நியமனம் செய்யப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஐகோர்ட் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பணியிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. சுப்ரீம் கோர்ட்டால் பணி நீக்க உத்தரவுக்கு ஆளான ஆசிரியர்களை முதல்வர் மம்தா கோல்கட்டாவில் இன்று (ஏப்ரல் 07) சந்தித்து பேசினார். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.'அரசு எப்போதும் உங்கள் பக்கம் உள்ளது. திரிணமுல் அரசுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. பணி நியமனம் பெற்ற அனைவரும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்களில் பலர் கோல்டு மெடல் வென்றவர்கள். இத்தனை ஆண்டுகள் பணியாற்றி, தகுதியுடைய மாணவர்களை உருவாக்கி உள்ளனர். இப்படியிருக்கையில், அப்படிப்பட்ட ஆசிரியர்களை தகுதியற்றவர்கள் என்பதில் நியாயமில்லை. சுப்ரம் கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது' என மம்தா பானர்ஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

oviya vijay
ஏப் 08, 2025 08:16

மமதைக்கு தேர்தல் சுரம்...போக போக இன்னும் பற்பல நாடகங்கள் அரங்கேறும்


Kasimani Baskaran
ஏப் 08, 2025 04:05

அதானே... கள்ளத்தனம் செய்ய எங்களுக்கு கடமை இருக்கிறது... அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது என்கிறார்...


Alagu saravana Raj
ஏப் 07, 2025 22:25

2006ம் ஆண்டு TNPSC குரூப் 1 செலக்ஷன் இதை உத்தரவு உச்ச கோர்ட் அலயித்தாது பின் மனித்தது ,அவர்கள் உயர் பதவில் தமிழ் நாடு உள்ளனர்


Nandakumar Naidu.
ஏப் 07, 2025 21:42

அப்போ சீக்கிரம் தூக்கு போட்டுக்கொள் மமதா. நாட்டிற்கும்,சமூகத்திற்கும்,வீட்டிற்கும் மிகவும் நல்லது நடக்கும்.


RAJ
ஏப் 07, 2025 21:30

சீக்கிரம் கிளம்புங்க... நல்லது நடக்கட்டும்..


Thetamilan
ஏப் 07, 2025 21:17

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது பாஜ அரசின் மத்திய அமைப்புகள் கட்டவிழ்த்துவிடும் தொடர் தாக்குதல்


theruvasagan
ஏப் 07, 2025 22:39

ஐயா. உச்சநீதிமன்றத்துக்கும் மம்மு பேகத்துக்கும் இடையில் உள்ள விவகாரம். அதில் மத்திய அரசு எங்கே வந்தது.


sankaranarayanan
ஏப் 07, 2025 20:48

தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள். தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என மம்தா பானர்ஜி கூறினார். உண்மையில் உச்ச நீதிமன்றம் மம்தாவின் அரசைத்தான் கலைக்க வேண்டும் ஆசிரியர்களை பழி வாங்கக்கூடாது ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சரியில்லை என்றே அரசை கலைக்கலாம் செய்யுமா இந்த உச்ச நீதி மன்றம்


KRISHNAN R
ஏப் 07, 2025 20:42

சட்டத்தில் கிடைக்கவில்லை.. என்றால்.. தர்ணா போராட்டம் என்று கட்சிகள் கற்று கொடுத்துள்ளன.


Narasimhan
ஏப் 07, 2025 20:38

மம்தாவுக்கு மனதில் சூனா பானா என்ற நினைப்பு


r ravichandran
ஏப் 07, 2025 20:37

கொடுத்த பணத்தை ஒவ்வொருவரும் திருப்பி கேட்டால் என்ன செய்வார் மம்தா பானர்ஜி. அது தான் சமாதான நடவடிக்கை.


முக்கிய வீடியோ