உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தோ - திபெத் படையில் 526 காலிப்பணியிங்கள்: பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்தோ - திபெத் படையில் 526 காலிப்பணியிங்கள்: பட்டதாரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) 526 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 14.இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சப்-இன்ஸ்பெக்டர் - 92, ஹெட் கான்ஸ்டபிள் - 383, கான்ஸ்டபிள் - 51

கல்வித் தகுதி என்ன?

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, பி.எஸ்.சி., பி.டெக்., மற்றும் பி.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு, 12ம் வகுப்பு தேர்ச்சி உடன், ஐ.டி.ஐ., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கியமான தேதிகள்

வரும் நவம்பர் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 14.

விண்ணப்பக் கட்டணம்

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200. ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100.

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை