உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு காலத்தில் விற்பனை வரி , வாட் வரி விதிக்கப்பட்ட பொருட்கள்: இப்போது வரி முற்றிலும் நீக்கம்

ஒரு காலத்தில் விற்பனை வரி , வாட் வரி விதிக்கப்பட்ட பொருட்கள்: இப்போது வரி முற்றிலும் நீக்கம்

சென்னை: ஜிஎஸ்டி அமல் செய்வதற்கு முன்னர், பல பொருட்களுக்கு விற்பனை வரி வாட் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு வரி வசூலிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு இப்போது மத்திய அரசு வரி முற்றிலும் நீக்கியுள்ளது.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர், வாட்( மதிப்பு கூட்டப்பட்ட வரி) கலால் வரி, செஸ், விற்பனை வரி( சேல்ஸ் டாக்ஸ்) என பல வரிகள் இருந்தன. இதன் காரணமாக பல பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும், மாநில எல்லைகளில் இருந்த சோதனைச் சாவடிகளால், சரக்கு வாகனங்கள் போய்ச் சேர 15--20 நாட்கள் தாமதமாகின. இது போன்வற்றை தவிர்க்க கடந்த 2017 ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. அதில், 5,12, 18, 28 என்ற நான்கு அடுக்குகள் இருந்தன. தற்போது, தொடர்ச்சியான ஆய்வுக்கு பிறகு தற்போது ஜிஎஸ்டியில் மத்திய அரசு மறுசீரமைப்பு செய்துள்ளது. அதில் 4 அடுக்கு வரியானது, 5 மற்றுமு் 18 என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 90 சதவீத பொருட்கள் 5 சதவீத வரம்புக்குள் வந்துள்ளன. அத்தியாவசிய பொருட்கள், 33 விதமான உயிர்காக்கும் மருந்துகள், உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னர், அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதன் விலையும் அதிகமாக காணப்பட்டது. 2017 ல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அதன் மீது குறைந்த வரியே நிர்ணயம் செய்யப்பட்டது. . தற்போதைய ஜிஎஸ்டி சீரமைப்பில் அந்த வரிகளும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைந்துள்ளது ஏழை மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். விற்பனை வரி, வாட் வரி விதிக்கப்பட்ட காலங்களில் பால் பால் பொருட்களுக்கு 4-6% வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜிஎஸ்டி சீரமைப்பில் ஜீரோ ஆக்கப்பட்டு உள்ளது. அதேபோல், முட்டை காய்கறி பழம்: 2.5- 6%, கல்வி மருத்துவ சேவைகள் : 0- 6% , உயிர்காக்கும் மருந்துகள்:5-8%, முந்திரி, திராட்சை, டீ: 6-7%, பன்னீர், பரோட்டா : 4 -8% காப்பீடு : 9-15% என விற்பனை வரி மற்றும் வாட் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஜிஎஸ்டி சீரமைப்பில் வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mahendran Puru
செப் 24, 2025 15:30

கிஸ்தி பகல் கொள்ளை, வரி விகிதம் குறைத்தவுடன் வெளிச்சத்திற்கு வந்ததை இப்படியும் கம்பி கட்டலாமா? பாஜகவின் உறவு கட்சி பி ஆர் எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ் சொல்கிறார் நிஜமாகவே மோடிஜிக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் அதிகமாக வசூலித்த பணத்தை திரும்பத் தரட்டும் என்று.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 23, 2025 22:18

சர்க்கரை நோய் மருந்துகளுக்கு வரி முற்றிலும் நீக்க வேண்டும்.


ManiK
செப் 23, 2025 21:09

இப்படில்லாம் அப்பட்மான உண்மையை செய்தியாக பொசுக்குன்னு போடப்ப்டாது... திராவட மாடல் கோபிச்சுக்கும்.


naga
செப் 23, 2025 20:44

அப்படியாங்க... சரிங்க... டீக்கடையில் டீ காபி விலை என்ன னு சர்வே எடுத்து போடுங்க..!


G Mahalingam
செப் 23, 2025 20:00

ஜிஎஸ்டி முன் சுமார் 35 சதவீதம் வரி வசூலித்தனர். அப்போது வெளியே தெரிவது விற்பனை வரி மற்றும் மத்திய வரி 5+3 சதவீதம் மட்டுமே.


தாமரை மலர்கிறது
செப் 23, 2025 19:27

உலகிலேயே மிகவும் கம்மியான வரி போடும் அரசு இந்தியா தான்.


Nag Vasan
செப் 23, 2025 19:21

வரி குறைப்பு சரியே ஆனால் மாநில கவெர்மென்ட் விலையை குறைக்குமா என்பதே மக்கள் வைக்கும் கேள்வி.


MARUTHU PANDIAR
செப் 23, 2025 20:18

நிச்சயம் தே ஜ ஆளும் மாநிலங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மக்கள் கதற வேண்டியது தான்.


Saai Sundharamurthy AVK
செப் 23, 2025 18:54

காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் பல வகையான வரிகள் போட்டு மக்களை இம்சை செய்து கொண்டிருந்தனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சீர்திருத்தம் ஆரம்பிக்கப்பட்டு பலமுனை வரிகள் போய் ஒரு முனை வரி என்று ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டது. இப்போது அதிலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. நிறைய பொருட்களுக்கு 0 வரி என்கிற நிலையை கொண்டு வந்த பாஜக அரசுக்கு நன்றி. ஜி.எஸ்.டி கவுன்சில் என்கிற பெயரில் எல்லா மாநிலக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் படி செய்து அவர்கள் மூலமாகவே சீர்திருத்தங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடிஜிக்கு மிக்க நன்றி.


Naga Subramanian
செப் 23, 2025 18:29

இன்று சிமெண்ட் 2 மூட்டை வாங்கினேன். ஆனால், ஜீ எஸ் டி ஏன் குறைக்கவில்லை என கேட்டதற்கு, இது பழைய ஸ்டாக் என்று கூறி தட்டி கழித்து விட்டார்கள்.


ஆரூர் ரங்
செப் 23, 2025 19:53

பழைய ஸ்டாக் என்றாலும் புதிய விலையில்தான் விற்க வேண்டும். பில் நகலுடன் தொடர்பு எண்ணுக்கு புகாரளிக்கலாம்.


Ganesan
செப் 23, 2025 18:23

Aavin products increased base price by cheating consumers


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை