பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அவசியமானது. இது ஒரு வழக்கமான நடவடிக்கை. இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். சுதந்திரமான மற்றும் நம்பகமாக தேர்தல் நடைபெறுவதை இது உறுதி செய்யும்.சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்திதேச நலனே முக்கியம்!
இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை. மேலும் எந்த அழுத்தமும் இல்லை. நாட்டின் நலனை மனதில் வைத்து, நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். காங்., ஆட்சியில் தான், குடும்ப நலனுக்காக வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. எங்களுக்கு தேச நலனே முக்கியம்.பியுஷ் கோயல். மத்திய அமைச்சர், பா.ஜ.,மாற்றம் கிடையாது!
நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதே, சமாஜ்வாதியின் கொள்கையாக இருந்து வருகிறது. இதில், எப்போதும் மாற்றம் கிடையாது. குறிப்பிட்ட சிலர் தான் மொழியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அவர்களால் தான் பிரச்னை ஏற்படுகிறது.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி