உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி கோவிலை வைத்து கல்லா கட்டிய ஜெகன் கட்சி பிரமுகர்; மீண்டும் சர்ச்சையில் ஒய்.எஸ்.ஆர்., காங்.,

திருப்பதி கோவிலை வைத்து கல்லா கட்டிய ஜெகன் கட்சி பிரமுகர்; மீண்டும் சர்ச்சையில் ஒய்.எஸ்.ஆர்., காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருமலை: வி.ஐ.பி., தரிசன டிக்கெட் பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.எல்.சி., ஷாகியா கனம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் போது, பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலின் பிரசாதமான லட்டில் மாட்டு கொழுப்பு மற்றும் மீண் எண்ணெய் கலந்ததாக எழுந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இது திருப்பதி கோவில் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒய்.எஸ். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு இவ்வாறு செய்து விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில், திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., தரிசனம் மற்றும் வேதா ஆசிர்வச்சனம் பூஜைக்காக அனுமதி சீட்டு பெற்று தருவதாகக் கூறி, ரூ.65 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.சி., ஷாகியா கனம் உள்பட 3 பேர் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஸ்ரீவாரி கோவில் அருகே சாய் குமார் ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, லட்டு விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ள ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸூக்கு, இந்த சம்பவமும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
அக் 20, 2024 21:39

திருடிய காசில் ஒரு பத்து சதம் தசமபாகம் கொடுத்து அல்லது ஜமாஅத் க்கு கொடுத்து பாவ மன்னிப்பு பெறலாம் என்ற வழிமுறை உள்ள வரை இவர்களது பாவங்கள் குற்றங்கள் குறைவற நடக்கும்.. அல்லேலூயா.. ஆமீன்


kumar
அக் 20, 2024 21:28

அட இது என்னங்க பெரிய விஷயம் . நம்ம திராவிட மாடல் ஆடசியிலே கோவில் பணத்துல தான் ஆட்சியே நடக்குது அதிகாரிகளுக்கு சொகுசு கார் கிடைக்குது கோவில் நிலைத்த வித்து , வாடகைக்கு விட்டுத்தான் பல பேர் பொழப்பே நடக்குது . அதனால் தான் இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சி தான் முன் உதாரணமாக இருக்குன்னு சுடாலின் சொன்னாரே .


Ramesh Sargam
அக் 20, 2024 20:43

இவ்வளவு அட்டூழியங்களை அந்த பகவான், ஏழுமலையான் எப்படி கண்டுக்காம இருந்தாரோ, குற்றம் செய்தவர்களை தண்டிக்காம விட்டாரோ...? பகவானே, எங்கள் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள்தான் வழக்குகளை மெத்தனமாக விசாரித்து தீர்ப்பளிக்கும். உங்கள் தீர்ப்பு ஏன் தாமதமாகிறது?


Constitutional Goons
அக் 20, 2024 20:42

மத ஸ்தலங்களை வைத்து அரசியல்


karthik
அக் 21, 2024 07:52

இங்க மதத்தை வச்சுதான் 99% அரசியல் நடக்குது.. உங்கள சரியான விஷயத்துக்காக கொஞ்சம் இடிக்கும் பொது வலிக்குதா ?


ganapathy
அக் 20, 2024 20:22

ஏழுமலையான் இவனுங்க மேல கூடிய சீக்கிரமாக "மூர்க்கத்தனமான" தாக்குதல் நடத்த வேண்டும்.


Rasheel
அக் 20, 2024 20:19

மர்ம நபர். இப்போது புரியும்


Dharmavaan
அக் 20, 2024 18:44

இந்த ஷாகியா எந்த மதம்


S. Gopalakrishnan
அக் 20, 2024 17:15

ஷாகியா கனம் அவர்களுக்கு திருப்பதியில் என்ன வேலை ?


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 17:15

பெருமாளே


என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:10

சே சே எவ்வளவு பிச்சைக்கார கட்சி இந்த ஜெகன் கட்சி வெறும் ரூ 60,000 ஏமாற்றுதல்????நான் சரி ரூ 60,000 கோடி என்று இருக்குமோ என்று தேடி தேடி பார்த்தேன்????இதியாய் திருட்டு திராவிட கட்சியிடம் விட்டு விடுங்கள் ஏமாற்றுதலில் ஒரு தனி உயரம் இந்த கட்சி ஒரு கவுன்சிலர் - ரூ 100 லட்சம் ஒரு எம் எல் ஏ என்றால் ரூ 10 கோடி ஒரு அமைச்சர் என்றால் ரூ 100 கோடி ஒரு முதல்வர் என்றால் ரூ 10,000 கோடி அப்படி ஒரு ஸ்டேட்டஸ் இருக்கணும் ஏமாற்றுதலில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை