உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கில்லை: முதல் முறையாக மறுத்து பேசிய ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நேரடி இருதரப்பு ஒப்பந்தத்தின் விளைவாகவே இந்தியா - பாக்., இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் அமெரிக்க மத்தியஸ்தம் எதுவும் இல்லை,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாக தெரிவித்தார்.இந்தியா - பாக்., இடையே நடந்து வந்த சண்டையை நிறுத்திக் கொள்வதாக கடந்த, 10ம் தேதி இருதரப்பும் அறிவித்தது. அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்ததால் தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூறிவந்தார்.இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முதல்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

பதிலடி

ஐரோப்பிய நாடான நெதர்லாந்து சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள வானொலிக்கு அளித்த பேட்டி:பஹல்காமில் நடந்தது போன்ற பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எங்கள் பதிலடி இப்படித்தான் இருக்கும் என்பதையே, 'ஆப்பரேஷன் சிந்துார்' உணர்த்தி உள்ளது. நாங்கள் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். அவர்கள் பாகிஸ்தானில் இருந்தனர். அவர்கள் எங்கு இருக்கின்றனரோ, அங்கு தானே அடிக்க முடியும்.'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. அதற்கான சண்டை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணுவ நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாக்., விருப்பம்

சண்டையை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் தரப்புதான் முதலில் தெரிவித்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு சண்டை நிறுத்தம் அறிவித்தோம்.அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பிரதமர் மோடியிடமும், என்னிடமும் பேசினர்.அவர்களிடம் நாங்கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினோம். சண்டையை நிறுத்திக்கொள்ள பாக்., விரும்பினால், அவர்கள் நேரடியாக எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினோம். இறுதியில் அதுதான் நடந்தது.இந்த சண்டை நிறுத்தத்தில் வெளிநாட்டு மத்தியஸ்தம் குறிப்பாக அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை.காஷ்மீர் விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. ஒரு நாடு தங்களுக்கு சொந்தமான பகுதி குறித்து பேச என்ன இருக்கிறது?காஷ்மீரின் ஒரு பகுதியை, 1947 - 48 முதல் பாகிஸ்தான் ஆக்கிர மித்து வைத்துள்ளது. அப்பகுதியை விட்டு வெளியேறும்படி அவர்களுடன் பேச விரும்புகிறோம்.இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

பாக்., ராணுவ தளபதி சதி

பஹல்காம் தாக்குதல் பாக்., ராணுவத்தால் திட்டமிடப்பட்ட சதி என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார். பேட்டியில் அவர் தொடர்ந்து பேசியதாவது:பஹல்காமில், சுற்றுலா பயணியர் குறிவைத்து கொல்லப்பட்டனர். ஹிந்துக்கள் என்பதை உறுதி செய்த பின் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது மிக தெளிவாக திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. காஷ்மீர் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான சுற்றுலாவை சிதைப்பதும், மத பிரிவினையை ஏற்படுத்துவதுமே பாக்., ராணுவத்தின் நோக்கம். அவர்களின் அறிவுறுத்தலின்படி தான் இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நிகழ்த்தி உள்ளனர். பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீரின் பேச்சுக்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் ஒரு ஒற்றுமையை காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
மே 23, 2025 18:49

நெருப்பு இல்லாமல் பூகையாது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அப்படி ட்வீட் செய்யவேண்டும்? அன்றே டொனால்ட் டரம்ப்க்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியது தானே.


RAMAKRISHNAN NATESAN
மே 23, 2025 11:08

போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதன் முதலில் பிரதமரே தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் தெளிவாகச் சொல்லிவிட்டாரே ? உடன்பிறப்புக்கள் பார்க்கவில்லையா ? அவ்வளவுதான் இவர்களுக்குத் தெரிந்தது ....


பாமரன்
மே 23, 2025 08:09

அட்லீஸ்ட் ஜெய்சங்கர் மூலம் இப்போதாவது விளக்கம் குடுத்ததற்கு பாராட்டுக்கள்.


வீராசாமி
மே 23, 2025 07:29

டில்லி உஷ் படி இவருக்கு தெரியாமலேயே பிரதமரிடம் ட்ரம்ப் பேசியிருப்பாரு.


venugopal s
மே 23, 2025 07:20

அட பரவாயில்லையே, நமது ஆட்சியாளர்களுக்கும் இந்த விஷயத்தில் எதிர்த்துப் பேச தைரியம் வரும் போல் இருக்கிறதே!


Yes your honor
மே 23, 2025 09:58

ஆமாமாம். வெட்டி வாய்ச்சவடால் விடாமல், உருட்டு உதார் பேர்வழி மோடிஜியின் வீட்டு வாசலில் இன்று காத்திருப்பதை போன்று இல்லாமல், ஒருவாசகமானாலும் திருவாசகமாக நம் வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவாகவும் நிதானமாகவும் தனது தரப்பைத் தெரியப்படுத்தியுள்ளார்.. எப்பொழுதுமே சிங்கம் சிங்கம் தான்.


Oviya Vijay
மே 23, 2025 06:52

அவ்வாறு அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லையென்றால் நாம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுமுன் அமெரிக்கா அதிபர் இந்தியா-பாக் போர் அறிவிப்பை வெளியிட எவ்வாறு நேர்ந்தது என்பதையும் கூறினால் நலம். ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின் தான் போர் நிறுத்தம் பற்றி உலகிற்கு தெரிந்தது. அதன் பின்னர் தான் இந்திய தரப்பில் அறிவிப்பு வெளியானது...


ஆரூர் ரங்
மே 23, 2025 07:38

ரொம்ப ஈசி.


Mecca Shivan
மே 23, 2025 06:25

இதை சொல்ல இவ்வளவு நாட்கள் தேவையா ? அவன் சொன்ன ஒரு மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தை கூடி பிரதமரே சொல்லிருக்கவேண்டிய விஷயம்.. உண்டியல் குலுக்கிகள் பாகிஸ்தானிய அடிமைகள் எல்லாம் குறை சொல்லும் அளவிற்கு உள்ளது உங்களின் நிதானமும் மறைத்துப்பேசும் தன்மையும்


Kasimani Baskaran
மே 23, 2025 03:55

இன்னும் ஒரு படி மேலே போய் பாக்கிகள் ஹாட்லைனில் கதறியதை வெளியிட்டு இருக்கலாம். எனக்கு என்னவோ பாக்கி இராணுவம் டெளசரை அவிழ்த்து அவமானப்படுத்தாதவரை ஓயமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. பங்காளதேச பிரிவினையின் பொழுது பாக்கி இராணுவம் இந்தியாவிடம் சரணடைந்தது நினைவில் இருக்கலாம்.


பாமரன்
மே 23, 2025 08:42

எல்லாம் நம்ம தலையெழுத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை