உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் அவசியம்; ஜெய்சங்கர் திட்டவட்டம்

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் அவசியம்; ஜெய்சங்கர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.டில்லியில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் பேசியதாவது: உலக அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்கள் யாருடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நம்புகிறீர்கள், உங்கள் தரவு எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்கள் தரவை உங்களுக்கு எதிராக மற்றவர்கள் எங்கே பயன்படுத்துவார்கள்? இவை அனைத்தும் கண்காணிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது.

பொறுப்புகள்

இன்று, இந்தியா அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நாடாக உள்ளது, அதிக பொறுப்புகள் உள்ள நாடாக உள்ளது. முதல் பதிலளிப்பவராக இந்தியா என்ற எண்ணம் அடிக்கடி எழும். அண்டை நல்லுறவு உடன், இந்தியா சர்வதேசத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். புவிசார் அரசியலில் இந்தியாவின் பொறுப்புகள் வளர்ந்து வருகிறது. தேவைப்படும் நேரத்தில் இந்தியா தரப்பில் இருந்து முதலில் பதில் அளிக்கப்படும். புதிய யோசனைகள் உள்ளிட்டவற்றை தெரிவிப்போம். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
டிச 16, 2024 15:34

என்னத்த மாத்தப்போறீங்க? அமெரிக்காவொட டூ உடப் போறீங்களா? சீனாவுக்குப் போய் டீ குடிக்கணுமா? ரஷ்யா ஆயில் விலையை குறைக்க மாட்டேங்காறாங்களா? எனக்கு தெரிஞ்சு சீனாவோட இன்னும் நெருக்கமாகப் போறீங்க. சீன முதலீடு இன்னும் அதிகரிக்கப் போகுது.


Barakat Ali
டிச 16, 2024 13:10

சரி ..... அவசியம் ........ அதை யாருக்குச் சொல்றீங்க ????


கிஜன்
டிச 16, 2024 09:53

இதுக்கெல்லாம் நேரு எப்படி இடையூறாக இருக்கிறார் என்பதையும் சொல்லி இருக்கலாம் ....


புதிய வீடியோ