பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு
புதுடில்லி : அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டி உள்ளார்.மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூராஸ் வெளியுறவு அமைச்சர் எட்வர்டோ என்ரிக் ரெய்னா கார்சியா அரசுமுறைப்பயணமாக கடந்த 15 - 18 வரை டில்லி வந்தார். மதிப்பாய்வு
இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹோண்டூராஸ் நாட்டு துாதரகத்தை அவர் திறந்து வைத்தார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.இது குறித்து நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:அரசியல் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு கூட்டாண்மை மற்றும் கலாசார பரிமாற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் முழுமையாக மதிப்பாய்வு செய்தனர். சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் துறையில் சாத்தியக்கூறுகள், திறன் மேம்பாடு, எரிசக்தி மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்டவற்றில் உலகளாவிய தெற்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்ப்பதில் ஹோண்டுராஸ் கொண்டுள்ள உறுதியை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார். சுகாதாரம்
இந்தியா உடனான உறவுகளை ஆழப்படுத்துவதில் ஹோண்டுராஸின் விருப்பத்தை துாதரக திறப்பு பிரதிபலிக்கிறது. வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, சுகாதாரம், விவசாயம் மற்றும் புதுமை உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு துாதரகம் ஒரு தளமாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.