உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் ராணுவ கேப்டன் வீரமரணம்: பயங்கரவாதிகளை வேட்டையாட கூடுதல் படை!

காஷ்மீரில் ராணுவ கேப்டன் வீரமரணம்: பயங்கரவாதிகளை வேட்டையாட கூடுதல் படை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர். எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, கட்டால் கிராமத்தை சேர்ந்த மன்னன் முகமது லத்தீப், அக்தர் அலி, சதாம் உள்ளிட்ட 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தேடுதல் வேட்டை

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) தோடாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார்.

28 பேர் உயிரிழப்பு

பதுங்கியுள்ள 4 பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முன்னதாக, ஹவில்தார் தீபக்குமார் யாதவ், லான்ஸ் நாயக் பிரவின் சர்மா ஆகியோர் ஆக.,10ல் நடந்த என்கவுன்ட்டரில் வீரமரணம் அடைந்தனர். ஜூலை மாதத்தில் மட்டும், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 28 பேர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். இதனால் கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sankare Eswar
செப் 12, 2024 14:47

மிக சரி


Sathyanarayanan Sathyasekaren
ஆக 14, 2024 18:24

ஓம் ஷாந்தி, குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது?


raj
ஆக 14, 2024 17:14

முர்க்கன் திருந்தவே மாட்டானா


Kavi
ஆக 14, 2024 16:38

No use all opposition parties support terrorism


s sambath kumar
ஆக 14, 2024 15:46

இஸ்ரேல் பாணி தான் கரெக்ட். சிலர் ஊலை இடுவார்கள். பொருட்படுத்தவே கூடாது.


subramanian
ஆக 14, 2024 15:34

நம்முடைய வீரர்கள் பலி ஆவதை தடுப்பதற்கு எல்லா தொழில் நுட்பமும் பயன் படுத்த வேண்டும். டிரோன், ஹெலிகாப்டர், சாட்டிலைட், தொலைநோக்கு கருவி மூலம் தொலை தூரத்தில் இருந்தே தீவிரவாதிகளை நரகம் அனுப்ப வேண்டும்.


S.Bala
ஆக 14, 2024 15:16

உற்பத்தி ஆகும் இடத்தையே அழித்துவிட்டால் என்ன ? சில நல்ல மரங்களும் வெட்டப்படும் . அதை பார்த்தால் நம் இடம் வறண்டுவிடும். அதை போல் உள்ளூர் துரோகிகளுக்கு விசாரணையின்றி மரண தண்டனை விதிக்க வேண்டும்.


Sivak
ஆக 14, 2024 17:18

கரெக்ட் விசாரணை வேஸ்ட் ... ஒரே ஒரு துப்பாக்கி குண்டு செலவு ... பார்த்தவுடன் சுட்டு விட வேண்டும் ...அப்புறமா விசாரணை நடத்திகிடலாம் ..


P. VENKATESH RAJA
ஆக 14, 2024 14:33

உயிரிழந்த ராணுவ தளபதி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்


Ramesh Sargam
ஆக 14, 2024 14:28

இதுபோன்ற மரணங்கள் மனதை உலுக்குகிறது.??


மேலும் செய்திகள்







புதிய வீடியோ