உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் முழுமை பெறாது: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் முழுமை பெறாது: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

ஜம்மு; ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் முழுமை அடையாது,'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ஜம்மு அருகே உள்ள அக்னுார் என்ற இடத்தில், 9ம் ஆண்டு ஆயுதப்படை வீரர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: ஆட்சியில் இருந்த முந்தைய அரசுகள் காஷ்மீரை வேறு விதமாக நடத்தின. அதன் காரணமாக இங்கு வசிக்கும் நம் சகோதர - சகோதரிகளுக்கு டில்லியுடன் நெருங்கிய உறவு இல்லாமல் போனது. நியாயமாக நெருக்கமான உறவு இருந்திருக்க வேண்டும். காஷ்மீருக்கும் நாட்டின் பிறபகுதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் பணியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.அந்த பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு எதிராக வன்முறையை துாண்டும் விதமாக பேசி வரும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் பிரதமர் சவுத்ரி அன்வருல் ஹக்குக்கு கடும் கண்டனங்கள். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு - காஷ்மீர் முழுமை பெறாது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக அக்னுாரில், 108 அடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்த ராஜ்நாத் சிங், ராணுவ பாரம்பரிய அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajarajan
ஜன 15, 2025 18:58

உண்மை தான். அவங்க மொத்தபேரும் இங்க உள்ள வந்து, நாடு பூரா பரவிட்டா, ஓரிரு தலைமுறைக்கு பின்னர், மற்றவர் எல்லாம் சிறுபான்மையினர் ஆகிருவாங்களே. அப்போ இந்தியாவை அவர்கள் நாடாக அறிவிக்க சொன்னால், தற்போதைய பெரும்பான்மையர் நிலைமை ?? வேண்டவே வேண்டாம். போனது போனதாகவே இருக்கட்டும். அவர்கள் அங்கேயே இருக்கட்டும். யாரும் இருக்கும் இடத்தில இருந்து கொண்டால், எல்லாம் சௌக்கியமே.


புதிய வீடியோ