| ADDED : பிப் 01, 2024 07:09 AM
பெங்களூரு: ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனர் பதவியில் இருந்து, டாக்டர் மஞ்சுநாத் ஓய்வு பெற்றதால், காலியான அந்த இடத்துக்கு டாக்டர் ரவீந்திரநாத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரின், ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, பிரபலமான மருத்துவமனையாகும். இதில் 2007 முதல், இயக்குனராக பணியாற்றிய டாக்டர் மஞ்சுநாத், நேற்று ஓய்வு பெற்றார். இவரால் காலியான இடத்துக்கு, டாக்டர் ரவீந்திரநாத், 69, தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ரவீந்திரநாத், ஜெயதேவா மருத்துவமனையில், பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் இதற்கு முன், ராஜிவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழகத்தில், துணை வேந்தராக பணியாற்றினார்.