உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி வருகையால் ஹெலிகாப்டர் பயணம் தாமதம்: ஜனாதிபதியிடம் சோரன் கட்சி புகார்

மோடி வருகையால் ஹெலிகாப்டர் பயணம் தாமதம்: ஜனாதிபதியிடம் சோரன் கட்சி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக, ஹேமந்த் சோரன் ஹெலிகாப்டர் தாமதமான விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று ஜே.எம்.எம்., கட்சி கோரியுள்ளது.ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரம் புறப்பட அனுமதிக்கப்படவில்லை என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் நட்சத்திர பிரசாரகர்களுக்கு சமமான களத்தை உறுதிப்படுத்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை நாடியுள்ளது. கர்வா மற்றும் சாய்பாசாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்ததால், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, திரவுபதி முர்முவுக்கு அந்த கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் முதல்வர் பழங்குடி சமூகத்திலிருந்து வந்தவர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த நிலையை அடைந்தார். நீங்களும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாட்டின் உயரிய பதவியை அடைந்துள்ளீர்கள். எங்கள் நட்சத்திரப் பிரசாரகர் ஹேமந்த் சோரன், மதியம் 1.45 மணிக்கு மேற்கு சிங்பூமில் உள்ள குத்ரியில் ஒரு கூட்டத்தை நடத்திய பிறகு, சிம்டேகாவில் உள்ள பஜார் தாண்டில் பிற்பகல் 2.25 மணிக்கு தேர்தல் கூட்டத்தில் பேசத் திட்டமிட்டிருந்தார்.பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பேரணியில் பேசுவதற்காக பிற்பகல் 2.40 மணிக்கு சாய்பாசாவில் இருக்க வேண்டும். குத்ரிக்கும் சாய்பாசாவுக்கும் இடையே உள்ள தூரம் 80 கி.மீ., சிம்தேகாவுக்கு 90 கி.மீ. சோரனின் வருகைக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதமரின் பாதுகாப்பு நெறிமுறையை காரணம் காட்டி முதல்வரின் ஹெலிகாப்டர் ஒன்றரை மணி நேரம் பறக்க அனுமதிக்கப்படவில்லை. பழங்குடியின மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து நட்சத்திர பிரசாரகர்களும் சமமான அரசியலமைப்பு பாதுகாப்பையும், மரியாதையையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
நவ 05, 2024 18:38

இவர் என்ன சொல்ல வர்றார் இவரும் நாட்டின் பிரதமரும் பாதுகாப்பிற்கு சமமா? தன்னை ஒரு பெரிய கோமாளி என்ற எண்ணம் இவருக்கு எப்போதும் கேஜரிவால் மாதிரி உண்டு கடைசியில் கேஜரிவாலுக்கு நேர்ந்த கதி விரைவிலேயே இவருக்கும் நடக்கும் .காணாமலே போயிடுவார்


அப்பாவி
நவ 05, 2024 17:15

நீங்க வேற. ஜீ வந்தால் எனக்கே அதே கதிதான்.


Ganesun Iyer
நவ 05, 2024 16:14

நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம்...


Srinivasan Krishnamoorthi
நவ 05, 2024 11:50

ராஜிவ் ஜார்கண்ட் வந்தப்பவும் தாமதம் ஏற்பட்டது சோரன். உளறுவதை நிறுத்திவிட்டு பிரச்சாரம் பண்ணுப்பா தோல்வி பயம் இருக்க கூடாது ஒரு கட்சிக்கு


Rajan A
நவ 05, 2024 11:42

ஹெலிகாப்டரில் பறப்பது அதிசயம். எல்லாம் வெத்து வேட்டு


RAJAKUMAR PT
நவ 05, 2024 11:32

இந்த பிரச்சனைக்கும் ஜாதிக்கும் என்ன சம்மந்தம்.


ஆரூர் ரங்
நவ 05, 2024 11:26

ஜாமீனில் இருப்பவருக்கு இவ்வளவு திமிர் தேவையா?


Venkateswaran Rajaram
நவ 05, 2024 10:55

டேய் கொள்ளைக்காரர்களா, ஜனாதிபதிக்கு பதவி கிடைத்தது அவர் அதற்குரிய தகுதி உள்ளவர் என்பதால் தான் கிடைத்தது.. இதில் சாதி இனம் என்பதை சொல்லி அவரை சிறுமைப்படுத்தாதே


Palanisamy Sekar
நவ 05, 2024 10:52

முட்டாள்தனமான விதண்டாவாதம். இவரும் பழங்குடியினராம் ஜனாதிபதியும் பழங்குடியினராம். எப்படியெல்லாம் சிபாரிசுக்கு போகின்றார்கள். புகார் சொல்லுங்கள், உங்களை யாரும் தடுக்கப் போவதில்லை. அதிலென்ன பழங்குடியினர் என்கிற சாதீய பார்வை. நாட்டில் பிரதமருக்கு பின்னர் தான் பிற முதல்வர்கள். பாதுகாப்பில் குறைபாடு இருத்தல் கூடாது என்பதுதான் பாதுகாப்பு அதிகாரிகளின் முதல்வேலையே. சோரன் எப்போ வேண்டுமானாலும் போய்க்கலாமே ..பிரதமருக்கான பொறுப்பு உள்நாட்டில் உள்ளது முதல் வெளிநாட்டு அதிகாரிகளின் சந்திப்புகள், பயணங்கள் எல்லாமே இருக்கும். சோரனுக்கு அப்படி இல்லை. அடுத்தமுறை அவர் பதவிக்கு வருவாரோ என்பதே சந்தேகமே. அப்படி இருக்கும்போது ப்ரோட்டோகால் பற்றியெல்லாம் தெரியாத இவர் போன்றோர் தான் நமது அரசியலில் பரிதாபங்கள்.


Venkateswaran Rajaram
நவ 05, 2024 10:37

எல்லாத்துக்கும் இந்த சாதி இனம் பயன்படுத்துவார்கள் ... கொள்ளையடிப்பதற்கு அதனால் கிடைத்த பதவியை பயன்படுத்துவார்கள்....