உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.பி.ஐ., வங்கியில் வேலை இருக்கு: பி.இ.,- பி.டெக்.,- எம்.சி.ஏ., பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு

எஸ்.பி.ஐ., வங்கியில் வேலை இருக்கு: பி.இ.,- பி.டெக்.,- எம்.சி.ஏ., பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு

புதுடில்லி: உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட 1511 காலி பணியிடங்களை நிரப்ப எஸ்.பி.ஐ., வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.துணை மேலாளர் ( ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி)- 187 துணை மேலாளர் ( இன்ப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ்)- 412 துணை மேலாளர் ( நெட்வொர்க்கிங் செயல்பாடுகள்)- 80 துணை மேலாளர் ( IT, ஆர்க்கிடெக்சர் )- 27 துணை மேலாளர் ( தகவல் பாதுகாப்பு) - 7 உதவி மேலாளர்- 798

கல்வி தகுதி என்ன?

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பி.இ., -பி.டெக், - எம்.எஸ்.சி., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமும் தேவை.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ.750. எஸ்.சி., எஸ்.டி., பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
செப் 15, 2024 19:55

சம்பளம் மற்ற படிகள், சவுகரியங்கள் வேலை நேரங்கள்,சம்பள உயர்வு பிற சாபட்வேர் கம்பெனிகளை ஒப்பிட்டு தெரிவிக்கவும். வேலை நேரம் மற்றும் இட ஒதுக்கீட்டில் போனது போக பாக்கி நிற்கும் பதவி எண்ணிக்கை சிங்கள் டிஜிட் ஆ அல்லது டபுள் டிஜிட் ஆ என்ற முக்கிய விஷயங்களை தெரிவிக்கவும்.


புண்ணியகோடி
செப் 15, 2024 08:46

எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னா எங்க கிடைக்கும்னு சொல்லுங்க பளீஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை