உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு; ஒப்பந்ததாரர் தலைமறைவு

ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்பு; ஒப்பந்ததாரர் தலைமறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்,28 என்பவர் அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், கடந்த 1ம் தேதி முகேஷ் காணாமல் போகி விட்டதாக, அவரது அண்ணன் யுகேஷ் சந்திரசேகர் போலீஸில் புகார் அளித்தார். மேலும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் ரிதேஷை சந்திக்க சென்ற பிறகு தான் அவர் மாயமானது தெரிய வந்தது. அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், ஜன.,3ம் தேதி சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் உள்ள செப்டிக் டேங்கில், முகேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் சக பத்திரிகையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரை தேடி வருகின்றனர். மேலும், அவரது சகோதரர்கள் தினேஷ் மற்றும் ரிதேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள முதல்வர் விஷ்ணு தியோ சாய், 'முகேஷின் மரணம் பத்திரிகை மற்றும் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு', எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Raj S
ஜன 10, 2025 01:09

யாரும் இனிமே அண்ணா பல்கலைக்கழக பிரச்னையை பேசாதீங்கப்பா. ஏன்னா அதைவிட முக்கியம் பிஜேபி ஆளும் மாநிலத்தில் ஒரு குற்றம் நடந்துடுச்சு... நம்ம வீட்ல இருக்கற பொம்பளபுள்ளைங்கள எவன் என்ன செஞ்சாலும் பரவால்ல, நாம அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு மொதல்ல பாப்போம்...


Azar Mufeen
ஜன 05, 2025 04:51

குஜராத் மாடல் =திராவிட மாடல் இரு மாடல்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


தமிழன்
ஜன 04, 2025 21:51

பாஜக ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யமே 2 திருட்டு முன்னேற்ற கழகங்களின் ஆட்சியின் லட்சணமும் இதே கதைதான் அரசியலில் யோக்கியன் எவனும் இருக்க முடியாது உயிரோடு இருக்குவும் விட மாட்டானுகள்


Mohan
ஜன 04, 2025 21:20

It is BJP ruling state.


அப்பாவி
ஜன 04, 2025 20:12

சத்துஸ்கரில் இரட்டை இஞ்சின் சர்க்கார் நடக்குதுன்னு போட மறந்துட்டாங்களே. ஊயலே கிடையாது அங்கே. கேக்வி கேட்டா டமால்.


nagendhiran
ஜன 04, 2025 20:06

பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தா பொங்கியிருப்போம்? நடந்தது விடியல் கூட்டணி மாநிலமாச்சே? முதலாளி விசுவாசத்தில் அனைத்தையும் பொத்திட்டு கடந்து செல்கிறோம்?


Ramesh Sargam
ஜன 04, 2025 19:55

ஊழலை இப்படி வெளிச்சம் போட்டு காட்டினால் இப்படி ஆகும் என்று பயந்து பல பத்திரிகையாளர்கள் உண்மையை பதிவிடுவதில்லை. பத்திரிகையாளர்களுக்கு அரசு மற்றும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்து அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தால், இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்.


Kalyanaraman
ஜன 04, 2025 20:59

கடுமையான தண்டனையும் கிடையாது. வழக்கு விசாரணை பல வருஷத்துக்கு இழுத்து செல்லும். இப்படிப்பட்ட கேவலமான, முதுகெலும்பு இல்லாத சட்டங்கள் தான் குற்றவாளிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. குற்றவாளிகளை அதிகரிக்கவும் உதவுகிறது.


என்றும் இந்தியன்
ஜன 04, 2025 18:48

அன்றே சொன்னாரே ஸ்டாலின் திருட்டு திராவிட அறிவிலி மாடல் இந்தியா பூராவும் இருக்கின்றது என்று, அதைத்தான் இது காட்டுகின்றது


Mohan
ஜன 04, 2025 21:22

ஐயா இது பிஜேபி ஆளும் மாநிலம்.


என்றும் இந்தியன்
ஜன 04, 2025 18:43

இதுக்குத்தான் இந்தியாவில் மீடியாக்கள் என்ன செய்கின்றது???? அயல்நாட்டு பணம் பணம் பணம் வாங்கினோமா இந்தியாவிற்கு எதிராக உளறினோமா என்று இருந்தால் தான் அவர்கள் ஊழல் அம்பலப்படுத்தாமல் இருந்தால் அவர்கள் நீண்டு வாழ முடியும் என்று முடிவு செய்து இப்படி நடந்து கொள்கின்றார்கள்.மீடியா, பணம் பணம் பணம் கொடு எதற்கும் ரெடி ஜாதி வகை ஆகிவிட்டது


jayvee
ஜன 04, 2025 18:26

இதற்க்கு பயந்துதான் தமிழகத்தில் எல்லா மீடியாக்களும் திராவிட சொம்பாக மாறியது


சமீபத்திய செய்தி