உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதரவு 14 பேர்; எதிர்ப்பு 11 பேர்; பார்லி கூட்டுக்குழுவில் வக்பு திருத்த மசோதா ஏற்பு!

ஆதரவு 14 பேர்; எதிர்ப்பு 11 பேர்; பார்லி கூட்டுக்குழுவில் வக்பு திருத்த மசோதா ஏற்பு!

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாடு முழுதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படுத்த வழி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை, கடந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அங்கு இந்த மசோதா ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த ஆறு மாதங்களாக பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும், வக்பு சொத்துக்கள் தொடர்புடைய தரப்பினர், சட்ட வல்லுனர்கள், அதிகாரிகள் ஆகியோரது கருத்துக்களை கேட்டது. இந்நிலையில், இன்று திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டது. திருத்த மசோதாவுக்கு குழுவில் உள்ள 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் வக்பு வாரிய மசோதா பார்லி., கூட்டுக்குழுவால் ஏற்கப்பட்டுள்ளது.இது குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறியதாவது: வக்பு மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில், பெரும்பான்மை உறுப்பினர்களால் வரைவு அறிக்கை, திருத்த மசோதா ஏற்கப்பட்டது. 656 பக்க கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு அறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்தோம். நாங்கள் இதை நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்போகிறோம்,'' என்றார்.பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''வக்பு திருத்த மசோதா இன்று இறுதி செய்யப்பட்டது. வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்,'' என்றார்.தி.மு.க., எம்.பி., ராஜா கூறுகையில், ''நேற்று இரவு 9.50 மணிக்கு எங்களிடம் வரைவு அறிக்கை தரப்பட்டது. ஒரே இரவில் எப்படி நாங்கள் அறிக்கை தர முடியும்,'' என்றார்.பா.ஜ., எம்.பி., ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறுகையில், ''வக்பு திருத்த மசோதா, ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 25 பேரில், 14 பேர் ஆதரித்ததால் திருத்த மசோதா ஏற்கப்பட்டது. சில கட்சிகள் ஆட்சேபனை குறிப்புகளை தெரிவித்துள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vijai
ஜன 30, 2025 09:20

கட்டுமரம் எப்பவும் இவங்களுக்கு தான் ஆதரவு கொடுக்கும் ஓட்டு பிச்சை இந்துக்கள் ஓட்டு வேண்டாம்


ram
ஜன 29, 2025 15:51

சிறுபான்மை ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்துக்களுடன் ஒப்பிடும்போது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர்.


C S K
ஜன 29, 2025 17:53

இது வேறு விஷயம். அது வேறு.


KavikumarRam
ஜன 29, 2025 15:41

///தி.மு.க., எம்.பி., ராஜா கூறுகையில், நேற்று இரவு 9.50 மணிக்கு எங்களிடம் வரைவு அறிக்கை தரப்பட்டது. ஒரே இரவில் எப்படி நாங்கள் அறிக்கை தர முடியும், என்றார்/// நீ ஒரு ம.....ம் அறிக்கை தரவேண்டாம்.


Satya
ஜன 29, 2025 15:32

Satya


Rajesh
ஜன 29, 2025 14:13

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்


Mohammad ali
ஜன 29, 2025 14:08

வக்பு சொத்து எல்லாம் பிராடு. 1500 ஆண்டுக்கு முந்தைய கோவில் எப்படி வக்பு சொத்தகமுடியும் .


GMM
ஜன 29, 2025 14:01

வக்பு வாரியம் உலகுக்கு ஒரு தவறான முன் உதாரணம். பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இந்திய காங்கிரஸ் உலக மக்களுக்கு செய்யும் துரோகம். எந்த முகமதியரும் ஒரு சதுர அடி நிலம் விலைகொடுத்து வாங்கிய ஆவணம் இருக்கா? குறுகிய மத முகம்மதிய ஆட்சியர் முத்திரை தாள் போன்ற பல வரி வசூல் செய்த ஆவணம் உள்ளது. வழிபாட்டு ஸ்தலம், மயானம் அமைக்க உலகு எங்கும் அனுமதி உண்டு. அப்படி இருக்கும் போது வக்பு வாரிய சட்டம் ஏன் தேவை பிஜேபி, காங்கிரஸ் , திராவிட கூட்டம் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.


Kumar Kumzi
ஜன 29, 2025 13:58

அடேங்கப்பா 2G திருடனும் இருக்கான்


Barakat Ali
ஜன 29, 2025 13:04

இஸ்லாமியர்களுக்காக தனி நாடே கொடுத்தபிறகும் இப்படி அடித்துப் பிடுங்க வக்ப் போர்டு எண்ணுவது, அதற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தருவது பெரும்பான்மையினர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் .... இதற்கு உதவும் அரசியல்வியாதிகள் தேச விரோதிகளே ....


vijai hind
ஜன 29, 2025 13:15

பிரியாணிக்கும் ஓட்டு பிச்சைக்கு தான் இந்த ஆதரவு


kali
ஜன 29, 2025 13:19

TOO MUCH ENCROACHMENT ON INDIAN LANDS. UNACCEPTABLE. ARREST THOSE WHO FRAMED IT.


kantharvan
ஜன 29, 2025 14:07

தம்பி பெட்டி படுக்கையை எடுத்துக்கிட்டு கிளம்பு நீ அந்த நாட்டுக்கு கிளம்பு? நாங்கள் இந்தியர்கள் இங்கே எதையும் அடித்து பிடுங்கவில்லை. அடித்து பிடுங்க நினைப்பவர்களுக்கே உமது உபதேசம் தேவைப்படும். கெட்டவர்களின் அவநம்பிக்கையை பற்றியெல்லாம் இஸ்லாமியர் கவலை பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது ?


R S BALA
ஜன 29, 2025 14:56

இங்க கருத்து போட்ட ஒருத்தர் பேர் பரக்கத் அலியாம் இவர் பெரும்பான்மைக்கு ஆதரவா கருத்து சொல்வாராம் மற்றொருவர் கந்தர்வனாம் அந்தப்பெயரில் இருந்துகொண்டு சிறுபான்மைக்கு ஆதரவா கருத்து போடுவாராம்.. நல்ல இருக்குதய்யா உங்க டீல்..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2025 17:28

// நல்ல இருக்குதய்யா உங்க டீல்..// ரெண்டு பேருமே முக்காடு போட்டுத் திரிவதா ஏற்கனவே எழுதினேன் பாசு .... ஆனா பரக்கத் சொல்வதில் நியாயம் இருக்குது .... சொந்த ஆளுங்க செய்யிற தப்பை குறிப்பிட்டா நாம சந்தேகப்படுறோம் .... அப்படிச் செஞ்சா எந்த மூர்க்கணும் திருந்த வாய்ப்பில்லை .... மறுபுறம் ஹிந்து பெயரில் எழுதுற கின்சிர்களோ எண்ணற்றவர்கள் ....


Barakat Ali
ஜன 29, 2025 19:20

மனதில் நியாயமாக்கப்படுவதை எழுத அனைவருக்கும் உரிமை உண்டு .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை