உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிராமணர்கள் பங்கு: அம்பேத்கரை சுட்டிக்காட்டிய நீதிபதி

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிராமணர்கள் பங்கு: அம்பேத்கரை சுட்டிக்காட்டிய நீதிபதி

பெங்களூரு: அரசியலமைப்பை உருவாக்கியதில் பிராமணர்களின் பங்களிப்பை அம்பேத்கர் வெகுவாக பாராட்டியதாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக் காட்டினார்.கர்நாடக பிராமண மகாசபாவின் பொன்விழாவை முன்னிட்டு, கர்நாடகாவின் பெங்களூரில், 'விஸ்வமித்ர' என்ற பெயரில் பிராமணர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் பேசியதாவது: நம் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய குழுவில் ஏழு பேர் இடம்பெற்றிருந்தனர். அதில், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி அய்யங்கார், பி.என்.ராவ் ஆகிய மூவரும் பிராமணர்கள். அரசியலமைப்பை உருவாக்கியதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அம்பேத்கர், 'பி.என்.ராவ் மட்டும் வரைவை உருவாக்காவிட்டால், அரசியலமைப்பு தயாராவதற்கு, இன்னும் 25 ஆண்டுகளாகியிருக்கும்' என, குறிப்பிட்டார்.பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு -ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசியலமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி ஸ்ரீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்னைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

sankar
ஜன 28, 2025 07:46

சாதி பித்தர்கள் ஒரு தேசியதலைவரை சாதிக்குள் அடைத்து விட்ட கொடுமை


KOKILA KSWAMY
ஜன 23, 2025 07:14

ஆகவே அம்பேத்கரை மட்டுமே கொண்டாடும் அறிவிலிகளை தூற்றுவோமாக


Alagusundram Kulasekaran
ஜன 22, 2025 18:04

கீழ் மேல் என்று இல்லை ஜாதி இரண்டு ஒழிய வேறு இல்லை சற்றுன்கால் நீதி வழிமொழிய இட்டார் பெரியார் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கின் உள்ளபடி


ஆரூர் ரங்
ஜன 22, 2025 11:34

அம்பேத்கார் அரசியல் நிர்ணயசபையில் சேர்க்கப் படுவதை நேரு எதிர்த்தார். ஆனால் காந்தி ஆதரித்தார். அந்நேரத்தில் நரசிங்க ராவ் எனும் கர்நாடக பிராமண சட்ட நிபுணர்தான் வரைவு அரசியல் சட்டத்தை உருவாக்கினார். அந்த வரைவின் ஷரத்துக்களை அம்பேத்கார் இடம் பெற்ற குழுவினர் விவாதித்து திருத்தங்களுடன் நிர்ணயசபைக்கு அனுப்பினர். அரசியல் நிர்ணய சபையில் எதிர்ப்பைக் குறைக்க முழு சட்டமும் அம்பேத்கரின் தயாரிப்பு எனும் கற்பிதம் பரப்பபட்டது என்பர். உண்மையில் அரசியல் சட்டம் ஒரு கூட்டு முயற்சிதான். உலகிலேயே மிக விரிவாக எழுதப்பட்ட அரசியல் சட்டம் நம்முடையது. அம்பேத்கார் பாராட்டுக்குரியவர்.


குமரன்
ஜன 22, 2025 09:28

பிராமணர்களை பார்ப்பாண் என்று ஏளனமாக சொன்ன திக, திமுக, வினால்தான் இந்த நாடு குட்டிச்சுவராக போனது பிராமணர்கள் மற்றும் சில சமூகத்தினர் அரசின் தலைமை பதவியில் இருக்கும் போது லஞ்சம் இல்லை சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது வியாபாரத்தில் கலப்படம் இல்லை ஹோட்டல்களில் பாவ புண்ணியம் பார்த்தனர் எதையும் புகழுக்காக செய்யாமல் தன்மானத்தை பெரிதென நினைத்தனர் உதாரணமாக வஉசி, சுப்பிரமணிய சிவா, பாரதியார் வாஞ்சிநாதன், காமராஜ், கக்கன், ஜீவா, போன்றவர்கள்


Barakat Ali
ஜன 22, 2025 09:24

மக்கள் பிரதிநிதிகளுக்கு வானளாவிய அதிகாரம் ....... மக்கள் பிரதிநிதி சரியில்லை என்றால் அந்த தண்ட கருமாந்திரத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வாக்காளர்களுக்கு அதிகாரமில்லை ...


Barakat Ali
ஜன 22, 2025 09:21

ஓ ...... அப்போ இப்படிப்பட்ட பேரவல அரசியலமைப்பு உருவாக பீம்ராவ் அம்பேத்கர் காரணமில்லையா ????


KOKILA KSWAMY
ஜன 23, 2025 07:19

கண்டிப்பாக அவர் மட்டுமே அரசியல் சாசனம் இயற்ற காரணமில்லை. உலகிற்கு இந்த பெரிய உண்மை எனோ மறைக்கப்பட்டது. நேரு காந்தி சென்ற வெளி நாட்டு மதங்களை பின்பற்றியோர் சுயநலத்திற்காக வும் இருக்கலாம்


M Ramachandran
ஜன 22, 2025 09:06

திருட்டு திராவிடர்கள் 200 ஊபீஸ்கள் இந்த செய்தியை படித்து விட்டு பதற்றம் அடைந்து கௌண்டமணி செந்தில் சினிமா நகைச்சுவை போல் சொம்பும் கையுமா அலைவதாக கேள்வி. இனி வருங்காலத்தில் ஆங்கில டிக்சனரியில் திராவிடம் என்றால் மக்கள் பணத்தை சுரண்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பவர்கள் என்று ஆகி விட போகுது. அவர்கள் யுத்த கனிம வள கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்டு பிடித்துள்ளார். இது வரை கேள்வி படாத பத்திரிகை செய்தி. இன்னும் தைரியமாக வேலை ஜரூராக தான் நடக்குது


அப்பாவி
ஜன 22, 2025 08:41

ஓஹோ... பிரிடிஷ் சட்டங்களை காப்பியடிச்சதில் இவிங்களுக்கும் பங்குண்டா? இதுவரை ஒரே ஒருத்தர்தான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.


Thiyagarajan S
ஜன 22, 2025 09:34

ஹா ஹாஹாஹா


R.RAMACHANDRAN
ஜன 22, 2025 07:48

பிரம்மத்தை நெருங்கியவர்கள் மட்டுமே பிராமணர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்கள் சுய நலனுக்கு போராடுபவர்களாகவும் சாதி வெறி பிடித்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள், தெய்வம் எல்லோர் உள்ளேயும் உள்ளது என அவர்களை மதிப்பவர்களாக இருப்பர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை