உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலட்சிய மனுவால் நீதிபதிகள் கோபம்; வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

அலட்சிய மனுவால் நீதிபதிகள் கோபம்; வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டு இருந்த நிவாரணத்தால் எரிச்சலடைந்த நீதிபதிகள், அதை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். குடும்ப தகராறு தொடர்பான வழக்கில், நேஹா டோடி என்பவருக்கு மும்பை குடும்பநல நீதிமன்றம், 2019ல் வழங்கிய நிவாரணங்களுக்கு தடை விதிக்கக்கோரி, சந்தீப் டோடி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் நிவாரணம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமைக்கு அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமையை இந்த சட்டப்பிரிவு அளிக்கிறது.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா பிறப்பித்த உத்தரவு: விவேகமுள்ள வழக்கறிஞர்கள் அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவின் கீழ் இதுபோன்ற அற்பமான மனுவை தாக்கல் செய்ய மாட்டார்கள். நீதிமன்றத்தின் சூழலையே நீங்கள் கெடுத்துவிட்டீர்கள்.இந்த மனுவை நீங்கள் எளிமையாக திரும்பப் பெற அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சந்தீப் டோடிக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். அதை நான்கு வாரங்களுக்குள் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oviya Vijay
ஏப் 23, 2025 11:23

அலட்சிய மனுவுக்கு அபராதம்...அப்போ அலட்சிய தீர்ப்புக்கு? 20...30...வருடங்கள் கழித்து தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள், ஜனாதிபதிக்கு கால நிர்ணயம் வழங்குவது சரியா...???


அப்பாவி
ஏப் 23, 2025 10:11

வழக்கைப் பார்த்தாலே எரிச்சல் வருதாம். பேசாம கோர்ட் மரத்தடியிலே கட்டப் பஞ்சாயத்து நடத்தி முடிச்சு உடுங்க. நாட்டாமைகளுக்கு வேலை வாய்ப்பு.


R.RAMACHANDRAN
ஏப் 23, 2025 09:34

இந்த நாட்டில் தேசிய சேவைகள் ஆணையம் உள்ளிட்ட சட்ட சேவை அமைப்புக்கள் வழக்கறிஞ்சர்கள் விரும்பினால் மட்டுமே சேவை என்ற நிலையில் செயல்படும் நிலையில் நீதி மன்றங்கள் விதிக்கும் அபராதத்தை அவைகளுக்கு செலுத்த சொல்லி உத்தரவிடுவதன் மூலம் அவை மக்களுக்கு சேவை செய்வதாக திரிகின்றனர்.


அப்பாவி
ஏப் 23, 2025 09:34

சாதாரண மக்கள் வழக்குப் போட்டால் அது அற்பமாம். கோடிக்கணக்கில் திருட்டு வேலை செஞ்சவங்கதான் கேஸ் போட முடியும் போலிருக்கு. அரசாங்கம், நீதிமன்றம் எல்லாமே தண்டத்துக்கு நடக்குது. உடுங்க. நாங்களே அடி தடி, கட்டப் பஞ்சாயத்து மூலம் பாத்துக்கறோம்னு சொல்ல வெச்சுருவாங்க.


R.Varadarajan
ஏப் 23, 2025 08:02

இப்படி அபராதம் விதிக்க சட்டத்தில் இடம்உள்ளதா அப்படியானால் அது எந்த சட்டம்?


நிக்கோல்தாம்சன்
ஏப் 23, 2025 08:01

வர்மா மீது என்ன நடவடிக்கை


baala
ஏப் 23, 2025 09:35

அது அவர் பணம் இல்லை. எங்கிருந்தோ காக்கா தூக்கி கொண்டு வந்து போட்ட பணம்.


GMM
ஏப் 23, 2025 07:16

குடும்ப தகராறு தொடர்பான முதலில் நிர்வாகத்தை விசாரிக்க சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் குடும்ப நல நீதி மன்றம் நிவாரணம் வழங்க வேண்டும். அலட்சிய மனு என்று கருதி , உச்ச மன்றம் விசாரித்து கோபம். வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம். பணம் நீதிமன்றம் கணக்கு அல்லது அரசு கணக்கில் மட்டும் தான் வரவு வைக்க முடியும்...பணம் அரசுக்கு செலுத்த கூற அதிகாரம் இல்லை என்றால், குற்றவியல் நடுவர் மன்றம் மூலம் தண்டிக்க வேண்டும். உச்ச மன்றம் நேரடியாக தண்டிக்க முடியாது.


புதிய வீடியோ