உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகளின் ஓய்வூதியம் பரிதாபத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட்

நீதிபதிகளின் ஓய்வூதியம் பரிதாபத்துக்குரியது: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்துக்குரியது' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, 6,000 முதல் 15,000 ரூபாய் வரையே ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் அவர்கள் ஆற்றிய சேவை, ஓய்வூதிய பலன்களில் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கும்படியும், அதற்குள் இந்த விவகாரத்துக்கு அரசு தீர்வு காண முயற்சிக்கும் என்றும் கோரினார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர், 10,000 முதல் 15,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவது பரிதாபத்துக்குரியது. இந்த விவகாரத்தில் தீர்வு காணும்படி அரசை வலியுறுத்துங்கள்; இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும்.இந்த வழக்கில் நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவு, தனிப்பட்ட மனுக்களுக்கு மட்டுமின்றி ஓய்வுபெற்ற அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Subash BV
டிச 19, 2024 19:01

Fake news. They are getting fat salaries like politicians and govt servants.


Ramesh
டிச 19, 2024 14:13

1. நாங்கள் 40 வருடம் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து EPF 95 திட்டத்தில் 3000 ரூபாய்க்கு குறைவாக வாங்குகிறோம். 2. பலர் இன்னமும் ரூபாய் 1000 தாண்டவில்ல 3. உயர் பென்ஷன் கொடுக்க உச்ச மன்றம் தீர்ப்பு கொடுத்தும் இன்றுவரை அதன் மீது ஒன்றும் நடவடிக்கை இல்லை 4 . பேங்க் களில் வட்டி யையும் குறைத்து மூத்த குடிமக்களின் வயிற்றில் அடிக்கும் நிலையில் இவர்களின் கூற்று இன்னும் எங்கள் வயிற்றெரிச்சலை கிளப்புகிறது. மற்றவர்களுக்கு நீதிக்காக பல பல விதமாக தீர்ப்பு வழங்கும் நீதி மன்றங்கள் மூத்த குடிமக்களின் அவல நிலையை ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும்


C.SRIRAM
டிச 19, 2024 12:55

தனக்கு ரத்தம் அடுத்தவனுக்கு தக்காளி சட்னி ?.


Ganesh Subbarao
டிச 19, 2024 12:24

நீதி மன்றம் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் இதெல்லாம் சரி ஆனால் அதுல் சுபாஷ் விஷயத்தில் அந்த நீதிபதியின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தவறு செய்யும் லஞ்சம் வாங்கும் நீதிபதிகளுக்கு தண்டனை தருவதற்கு சட்டம் வரவேண்டும். நீதி துறைக்கு accountabilty வர வேண்டும். பொறுப்பற்ற முறையில் நடக்கக் கூடாது


Vivekanandan Mahalingam
டிச 19, 2024 11:36

மேல் வரும்படி இல்லாத தனியார் நிறுவனங்களில் வேலை செய்து retire ஆகுபவர்களுக்கு மாதம் 1150 மட்டுமே EPF பென்ஷன்


CHELLAKRISHNAN S
டிச 19, 2024 13:27

I worked in ag office for 5 years in central public sector as an officer for 21 years. total 26 years service. now my pension is just 750 rupees only


GMM
டிச 19, 2024 11:32

நீதிபதிகள் சிலர் 10000 முதல் 15000 வரை ஓய்வு ஊதியம். பலர் போதிய ஓய்வு ஊதியம் பெறுகின்றனர் என்று பொருள். ? தீர்வு காணாவிட்டால் , நீதிமன்றம் சட்டத்தை மீறி தலையிடும் என்பது சரியா ? ஓய்வு பெற்ற அனைத்து நீதிபதிகளுக்கு பொருந்தும் போது குறையுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏன் பொருந்தாது. ? எந்த அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வு ஊதியம். ? இதனை ஏன் உச்ச நீதிமன்றம் தடுக்க முடியவில்லை. ஒரு மாதம் பதவி உயர்வு கொடுத்து அதிகம் ஓய்வு ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் விவரம் அறிந்து சீர் செய்யுமா நீதிமன்றம். ? ஓய்வு ஊதியம் கோடு ஒன்று உள்ளது. அதன்படி தான் ஓய்வு ஊதியம் நிர்ணயிக்க முடியும்.


Selvaraj
டிச 19, 2024 10:44

அடாடா. பதினைந்து ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் ரொம்ப குறைச்சலா தெரியிதுங்களா. மில் தொழிலாளர்கள் இரவு பகலாக முப்பது நாப்பது வருஷம் கடுமையாக உழைத்து ஓய்வு பெற்றவர்கள் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர்கள் எப்படி காலம் தள்ள வேண்டும். ஓய்வு பெற்ற மில் தொழிலாளிகளின் குறைந்த பட்சம் 7500/- ரூ. வழங்கச் சொல்லும் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா..?


Perumal Pillai
டிச 19, 2024 10:05

RTO மற்றும் பத்திர பதிவு துறைகளில் வேலை செய்வர்களுடைய ஓய்வூதியமும் பரிதாமமாக உள்ளது.


Chandrasekaran
டிச 19, 2024 11:35

வியப்பாக உள்ளது. மாநில அரசு விதீமுறைகளில்தானே வழங்கப்படுகிறது. மக்கள் பணியின்போது ஈட்டிய ஊக்கத்தொகையைக் கணக்கிட்டால் ஓய்வூதியம் என்பது மிகை எனக் கருத்து.


Bhaskaran
டிச 19, 2024 09:57

தனியார் நிறுவனங்களில் நாற்பது ஆண்டுகாலமாக பணிபுரிந்து ஈ பி எப். பென்ஷன் 2000 ரூபாய் கூட வாங்காத 17 பாவிகள் பாவிகள். இன்னும் பூமிக்கு பாரம் ஆக இன்னும் உயிரோடு இருக்கிறோம் எங்கள் பரிதாப நிலை பிரதமர் நிதியமைச்சர் கவனத்துக்கு சென்ற பின்னும் நடவடிக்கை இல்லை


Kanns
டிச 19, 2024 09:33

Abolish Pension Pay Only Appropriate Minm Wages to All Govt Staffs PrimeMinister to Labourers. Introduce Good Rewards for Exceptional Workers. Curtail All Wasteful-Lavish Govt Expenses incl 90%Undue Freebies. Saved Money be Used for Minm Wage JobGenerations, Healthcare& Infras Development


புதிய வீடியோ