உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்லுாரியில் மாணவி பலாத்காரம் ஜூனியர் மாணவர் கைது

கல்லுாரியில் மாணவி பலாத்காரம் ஜூனியர் மாணவர் கைது

பெங்களூரு: பெங்களூரில் கல்லுாரியின் கழிப்பறைக்குள், இன்ஜினியரிங் மாணவியை பலாத்காரம் செய்த, ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, ஹனுமந்தநகரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்தவர் ஜீவன் கவுடா, 21. இதே கல்லுாரியில், 22 வயது இளம்பெண், இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கிறார். ஜீவனுக்கும், மாணவிக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகினர். கடந்த 10ம் தேதி மதியம் 2:00 மணியளவில், கல்லுாரியின் தரை தளத்தில் மாணவியை, ஜீவன் சந்தித்தார். 'உன்னிடம் பேச வேண்டும்' என்று கூறி மாணவியை, கல்லுாரியின் 7வது மாடிக்கு ஜீவன் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், முத்தம் கொடுக்கவும் முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி ஏழாவது மாடியில் இருந்து படிக்கட்டுகள் வழியாக ஓடி வந்தார். அவரை விரட்டிச் சென்ற ஜீவன், ஆறாவது மாடியில் உள்ள கழிப்பறைக்குள் இழுத்துச் சென்றார். கதவை உள்பக்கமாக பூட்டி, மாணவியின் மொபைல் போனை பறித்ததுடன், அவரை மிரட்டி பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினால், அதிர்ச்சி அடைவர் என்று நினைத்த மாணவி, யாரிடமும் கூறாமல் இருந்தார். கடந்த 14ம் தேதி தன் தோழிகள் சிலரிடம் கூறினார். மாணவிக்கு தைரியம் கொடுத்த தோழிகள், போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறிய மாணவி, அவர்கள் உதவியுடன் ஹனுமந்தநகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜீவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 18, 2025 10:13

. கல்லூரிக்கு போனோமா, நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறலாமா என்று இல்லாமல், அந்த இளவயது கிளர்ச்சிகளில் உந்தப்பட்டு தவறு செய்து இப்படி அனாவசியமாக மடிகிறார்கள். இந்தக்காலத்தில் பெற்றோர்கள் வளர்ப்பும் சரியில்லை. இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு நாட்டில் அதிக தண்டனை இல்லை. ஆகையால் இளைஞர்கள் பயப்படாமல் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள். நம் நாட்டில் உள்ள சட்டங்கள் மாற்றப்படவேண்டும். முதலில் இப்பொழுது சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூடப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை